விஜய்யை பற்றி அவர் பிள்ளைகள் வந்து சொன்னார்களா?.. சங்கீதா விவகாரத்தில் பிரபல ஜோதிடர் ஓபன் டாக்
சென்னை: விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது அவரை முதலமைச்சராக்கிட வேண்டுமென அவரது ரசிகர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரது மனைவி சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் விஜய் - சங்கீதா விவகாரம் பற்றி பிரபல ஜோதிடர் ஷெல்வி ஓபனாக பேசியிருக்கிறார்.
சினிமாவில் பெரிய ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். அவரது ஒவ்வொரு படமும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதுண்டு. அதேபோல் சம்பளமும் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை வாங்குவதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. எனவே அவர்தான் திரைத்துறையில் உச்சத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதப்பட்டுக்கொள்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என பலர் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மனைவி சங்கீதாவுடன் பிரச்னை: இது ஒருபக்கம் இருக்க அவருக்கும், மனைவி சங்கீதாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்தப் பிரச்னைக்கு விஜய்யின் நடவடிக்கைகள்தான் காரணம் என்றும் திரைத்துறையிலிருந்து முணுமுணுப்புகள் கேட்டன. ஆனால் விஜய் மீது அவதூறு பரப்புவதற்காக வேண்டுமென்றே இப்படி பேசுகிறார்கள் என அவரது ரசிகர்களும், தொண்டர்களும் பேசிவந்தார்கள். இந்த தகவல் குறித்து விஜய்யோ, சங்கீதாவோ எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தார்கள்.
லண்டனில் சங்கீதா?: அதுமட்டுமின்றி சங்கீதா இப்போது விஜய்யுடன் இல்லை. அவர் தனது மகள் மற்றும் மகனுடன் லண்டனில் இருக்கும் தனது தந்தை வீட்டில் வசிக்கிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், ஜேசன் சஞ்சய் படம் இயக்கும் வாய்ப்பையே சங்கீதாவும், அவரது தந்தையும்தான் லைகாவிடம் பேசி வாங்கிக்கொடுத்தார்கள் எனவும் பரபரப்பாக பேசப்பட்டது. மனைவியுடன் தனக்கு இருக்கும் சண்டையினால்தான் ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார் என அறிவிப்பு வந்தபோது விஜய் ஒரு வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை என்றும் கருதப்பட்டது. மேலும், விஜய்யுடன் அவரது மகன் ஜேசன் பேச்சுவார்த்தையையே நிறுத்திவிட்டார் என்றும் தொடர்ந்து கூறப்பட்டுவந்தது
சங்கீதாவின் விவாகரத்து மனு தாக்கல்: இந்நிலையில் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். வழக்கு விசாரணை ஜூன் 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் இரண்டு பேர் பற்றி பிரபல ஜோதிடர் ஷெல்வி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "விஜய்யுடன் எனக்கு ஓரளவு பழக்கம். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் எனக்கு நல்ல க்ளோஸ்.
குழந்தைகள் வந்து சொன்னார்களா?: எனவே அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். 8 வருடங்கள் விவாகரத்து வழக்கை நடத்திவிட்டு பிள்ளைகளுக்காக சேர்ந்துவிடுவோம் என சொல்லி சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். திருமணமான அன்றே விவாகரத்து ஆனவர்களும் இருக்கிறார்கள். எனவே இவர்களும் அப்படி சேரலாம். ஏன் நடக்கக்கூடாது. விஜய் அவரது குடும்பத்தை பார்த்துக்கொள்ளவில்லை என்று எப்படி தெரியும். அவர் பார்த்துக்கொள்ளாமலா பிள்ளைகள் வந்தார்கள். இல்லை பிள்ளைகள் வந்து விஜய்யை குறை சொன்னார்களா?.. அப்படியெல்லாம் பேசக்கூடாது" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
