அட வேற லெவலா இருக்குமே.. தளபதி 69ல் இணையும் அசுரன் நடிகர்.. சூப்பர் போங்க

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் படத்தில் அசுரன் பட நடிகர் இணைந்திருக்கிறார்.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக அவர் நடித்த வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கியதால்; இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்தபடி படம் இல்லை. முக்கியமாக ஸ்க்ரீன் ப்ளேவை தொய்வில்லாமல் கொண்டு செல்லும் வெங்கட் பிரபு இதில் சொதப்பிவிட்டார் என்று பலர் பேசினார்கள்.

vijay thalapathy 69

தளபதி 69 எப்படி?: முழுக்க முழுக்க விஜய் அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க; கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுவதால்; நிச்சயம் தமிழ் சினிமா மறக்காத படமாகத்தான் இருக்கும் என்று இப்போதே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சரியான தேர்வு: வினோத் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர். தனது முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தன்னை நிரூபித்துவிட்டார். தொடர்ந்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் வலிமையை தவிர்த்து மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன. எனவே விஜய்யின் கடைசி படமான தளபதி 69ஐ இயக்குவதற்கு சரியான தேர்வு வினோத்தான் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

வந்து விழுந்த கண்டிஷன்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்கும்படியும்; எந்தவித பிரேக்கும் இல்லாமல் சில ஷெட்யூல்களிலேயே படத்தை முடித்துவிட வேண்டும் என்று வினோத்திடம் விஜய் உத்தரவு போட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனையடுத்து ஏற்கனவே வேகமாக படம் இயக்கும் வினோத் இப்போது முழு மூச்சாக ஷூட்டிங்கில் இறங்கியிருக்கிறாராம்.

இணைந்த நடிகர்: இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த டிஜே கமிட்டாகியிருக்கிறார். இதனை அவரே உறுதிப்படுத்தவும் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தளபதி 69ல் நான் மமிதா பைஜுவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். எனக்கு விஜய்யை சிறு வயதிலிருந்தே பிடிக்கும் அவருடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X