'இரும்புக்குதிரையில்’ அஜீத்தை பாலோ செய்யும் அதர்வா
சென்னை: 'பரதேசி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதர்வாவின் அடுத்த படம் என்ன என்ற பலரின் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது. தற்போது, AGS நிறுவனம். தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க அதர்வாவை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
பரதேசி படத்திற்கு வந்த பல வாய்ப்புகளைத் தவற விட்ட அதர்வா, நல்ல கதைக்காக தவம் கிடந்தார். அதற்கு கைமேல் பலனாக கிடைத்ததுதான் இந்த பட வாய்ப்பு.
இயக்குனர் அறிவழகனின் உதவியாளர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு 'இரும்பு குதிரை' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

யாரு ஹீரோயின்...
ஹீரோ அதர்வா தான் என்பதை மட்டும் உறுதி செய்து விட்டு, தற்போது ஹீரோயின் உட்பட பிற கலைஞர்களை தேர்வு செய்யும் வேலை நடை பெற்று வருகிறதாம்.

இவங்களும் பாங்காங் தான்...
'இரும்புக்குதிரையின் மொத்த ஷூட்டிங்கையும் பாங்காங்கில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

சூர்யா வில்லன், இப்போ...
'ஏழாம் அறிவு' படத்தில் அறிமுகமான வில்லன் டான்க்லி மீண்டும் இதிலும் அதர்வாவைத் துரத்த இருக்கிறார் வில்லனாக.

தல வழியில் அதர்வா...
'இரும்புக்குதிரைய்யில்' பைக் ரேசராக களம் இறங்கும் அதர்வா, அதற்காக கடினமாக பயிற்சி எடுக்கிறாராம். அஜீத்தை தன் ரோல் மாடலாக கொண்டு நடிக்க இருக்கிறாராம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











