பரதேசிக்கு அப்புறம் முழுமையாக கெட்டப்பை மாற்றிய அதர்வா!

பூமராங் படத்தில் மொட்டையடித்து நடித்துள்ளார் அதர்வா

சென்னை: பூமராங் திரைப்படத்திற்காக அதர்வா மொட்டையடித்துள்ளார்.

நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் அதர்வா. இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் ரிலீஸாக உள்ள படம் பூமராங்.

Atharva new bald look for Boomerang!

கண்ணன் இயக்கும் இப்படத்தில் அதர்வா மூன்று தோற்றங்களில் வருகிறார். அதில் ஒன்று மொட்டைத் தலை அதர்வா.

மூன்றுமே முக்கியமான தோற்றங்கள் என்பதால் அதர்வா மொட்டை போட ஒத்துக்கொண்டாராம். மற்ற இரண்டு தோற்றங்களையும் ஒப்பனை கலைஞர்களான மார்க் மற்றும் ப்ரீத்தி செயற்கையாக கொண்டுவந்துவிட்டனர். ஆனால் இந்த தோற்றத்திற்கு மொட்டையடித்தால்தான் தத்ரூபமாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.

மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இதை சரியாக செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்போடு மொட்டை போட்டுக் அதர்வா நடித்தாராம். அதர்வா மொட்டைத் தலையுடன் வரும் காட்சிகள் ஒரு மருத்துவமனையில் படமாக்கப்பட்டுள்ளது.

இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு, பூமராங் திரைப்படம் நிச்சயம் அதர்வாவின் சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக அமையும் என கண்ணன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மேகா ஆகாஷ், இந்துஜா ரவிச்சந்திரன், உபென் பட்டேல், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ரெட்டி திரைப்பட புகழ் ராதன் இசையமைத்துள்ளார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X