அதர்வாவின் தள்ளிப்போகாதே ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : பூமராங் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர் கண்ணன் அதர்வா கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படம் தள்ளிப்போகாதே

தெலுங்கில் நானி நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

அதர்வாவுக்கு ஜோடியாக இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க இப்பொழுது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இரண்டாவது முறையாக கூட்டணி

இரண்டாவது முறையாக கூட்டணி

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அதர்வா இப்பொழுது ஆக்சன் ஹீரோ கதைகளில் நடித்து மெல்ல மெல்ல ஆக்சன் கதாநாயகனாக மாறுகிறார். காதல் கதைகள் மட்டுமல்லாமல் வித்தியாசமான ஆக்சன் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா ஆர் கண்ணன் இயக்கத்தில் பூமராங் என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நின்னுக்கோரி திரைப்படம் இப்பொழுது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. ஆர் கண்ணன் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய அதில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். பிரேமம் மூலம் தமிழ் ரசிகர்களை வசியம் செய்த அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

காதல் கலந்த திரில்லர்

காதல் கலந்த திரில்லர்

கொடி படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த அனுபமா நீண்ட வருடங்களுக்கு பிறகு தள்ளிப்போகாதே மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். அனுபமா இதில் பரதநாட்டிய டான்சராக நடித்துள்ளார். காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் தள்ளிப்போகாதே - வில் வேலையில்லா பட்டதாரி அமிதேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அக்டோபர் 14

அக்டோபர் 14

சென்ற வருடமே அனைத்து பணிகளும் முடிவு பெற்று ரிலீசுக்கு தயாராக இருந்த இந்த திரைப்படம் கொரோனா சூழல் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இப்பொழுது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 14-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X