காதல் விவகாரத்தை போட்டுக் கொடுத்ததால் மேனேஜரை மாற்றிய அதர்வா!
சென்னை: தனது காதல் விவகாரத்தை வெளியில் கசிய விட்டதால் மேனேஜர்களை மாற்றிவிட்டார் நடிகர் அதர்வா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து மேனேஜர்களை அவர் மாற்றியதற்கு இந்தக் காதல் மற்றும் செய்தி கசிவுதான் காரணம் என்கிறார்கள்.
இதுவரை 2 பேரை இப்படி மாற்றி விட்டாராம் அதர்வா.

அப்பா காலத்திலிருந்து சம்பத்
நடிகர் அதர்வாவின் அப்பா முரளி காலத்திலிருந்தே அவர்கள் வீட்டில் மேனஜராக வேலைபார்த்து வந்தவர் சம்பத். இவருடன் வெங்கட் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் நீக்கம்
இந்த இருவரையும்தான் அதிரடியாக நீக்கியுள்ளார் அதர்வா.

ப்ரியா ஆனந்துடன் காதலா...
அதர்வாவுக்கும் ப்ரியா ஆனந்துக்கும் காதல் என்று கடந்த சில தினங்களாக பரபரப்பு பேச்சு உலா வருகிறது. இந்த விவகாரத்தை வெளியில் கசியவிட்டதே இந்த இருவர்தான் என்று கடுப்பான அதர்வா, இருவரையும் நீக்கிவிட்டாராம்.

சூர்யா மேனேஜர் வாங்க ப்ளீஸ்
இப்போது சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மேனேஜராக இருந்த ஒருவரை தனக்கு மேனேஜராக அதர்வாக நியமித்துளளாராம் (சூர்யாவுக்கு இப்போது வேறு மேனேஜர்).

ரேஞ்சை ஏத்துவாரா புது மேனேஜர்
இந்த மேனேஜர் தன்னையும் தனுஷ், சூர்யா ரேஞ்சுக்கு உயர்த்திவிடுவார் என நம்புகிறாராம் அத்ர்வா.


Click it and Unblock the Notifications











