பராசக்தில மிஸ் ஆனது.. இதயம் முரளில சிங்கிளா ஸ்கோர் செய்வாரா அதர்வா.. சுதா கொங்கரா சும்மா விடுவாரா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஜன நாயகன் மற்றும் பராசக்தி இடையே பாக்ஸ் ஆபீஸ் போட்டி நிலவும் என்று பார்த்ததும் இறுதியில் நடக்காமல் போனது.
இதுவரை ஜன நாயகன் படமே வரவில்லை. இந்நிலையில், அதர்வா நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் காத்திருந்த இதயம் முரளி இந்த வாரம் ஜூலை 10 திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

ஆனால், அந்த படத்துக்கு எதிராக சுதா கொங்கரா தொடுத்த வழக்கு என்ன ஆனது என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
அதர்வா படம் வருது: பானா காத்தாடி படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமான அதர்வா சுமார் 16 ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படத்துக்காக தொடர்ந்து போராடி வருகிறார். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் பண்ண இந்த வாரம் ஜூலை 10ம் தேதி இதயம் முரளி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், பகத் ஃபாசில், தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிஸ்ஸான பராசக்தி: கடந்த ஆண்டு அதர்வா நடித்த டிஎன்ஏ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. தணல் திரைப்படம் வந்ததே பலருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா நடித்த நிலையில், அதர்வாவுக்கு அந்த படம் பெரிய பிரேக் கொடுக்கும் என நினைத்தனர். சுதா கொங்கரா தனியாகவே அதர்வாவை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாகவும் அதர்வா தனது செல்லப்பிள்ளை என்றெல்லாம் சொன்னார்.
சுதா கொங்கரா சும்மா விடுவாரா?: ஆனால், பராசக்தி படம் சரியாக போகாத நிலையில், சுதா கொங்கராவுக்கு தர வேண்டிய சம்பளத்தையும் சரியாக ஆகாஷ் பாஸ்கரன் தரவில்லை என வழக்கு தொடுத்துள்ளார் சுதா கொங்கரா. சுமார் 8.39 கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதை கொடுத்து விட்டு இதயம் முரளி படத்தை ரிலீஸ் பண்ணட்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், படக்குழு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து புரமோஷனை பக்காவாக செய்து வருகின்றனர். அதர்வா முரளிக்கு இந்த படமாவது வெற்றிப் படமாக அமையுமா? திட்டமிட்டப்படி இந்த வாரம் வெளியாகுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications