அதர்வா முரளியின் “நிறங்கள் மூன்று“ படப்பிடிப்பு ஆரம்பம்… யார் நடிக்கிறாங்க தெரியுமா?

சென்னை : கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் நிறங்கள் மூன்று திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமான தலைப்புக்கொண்ட இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

அதர்வா முரளி

அதர்வா முரளி

அப்பாவின் அடையாளத்தோடு சினிமா துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகர் அதர்வா முரளி. சினிமாவில் நடிப்பதற்கு திறமைதான் முக்கியம் நிறமல்ல என்று சாதித்து காட்டியவர் நடிகர் முரளி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த அவர் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அறிமுகம்

அறிமுகம்

இவருடைய மகன் அதர்வா தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பரதேசி உட்பட பல வெற்றித் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

நல்ல கதை தேர்வு

நல்ல கதை தேர்வு

தனக்கு ஏற்றாற்போல் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதர்வா, தன் திரைப்படங்களில் பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கும் நிறங்கள் மூன்று திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். இத்திரைப்படத்தி ன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று முதல் தொடங்கி உள்ளது.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

இப்படத்தில் சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு படம் ஒரு மாறுபட்ட கதைகளத்துடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இங்த படமும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Recommended Video

Minnal Murali | Guru Somasundaram | Hero, Villain இருவருக்கும் என்ன வித்யாசம் ? | Filmibeat Tamil
கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

வெற்றித்திரைப்படங்களை கொடுத்துக்கொண்டு இருந்த அதர்வாவுக்கு சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தள்ளிப்போகாதேவும் தோல்வியைத் தழுவியது. தற்போது, குருதி ஆட்டம், அட்ரஸ், ட்ரிக்கல் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் ஆதர்வா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X