‘இரும்புக் குதிரை’யில் பீட்சா டெலிவரி செய்யும் அதர்வா...
சென்னை: திகில் படமான 'பீட்சா'வில் பீட்சா டெலிவரி செய்பவராக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. அந்தவகையில் தற்போது தனது அடுத்தப்படமான இரும்புக் குதிரையில் பீட்சா பாயாக நடித்து வருகிறாராம் அதர்வா.
பரதேசி'க்கு பின், நல்ல படங்களில் மட்டுமே, இனி நடிப்பது என்ற, முடிவுடன் இருந்த, அதர்வா, பல கதைகளை கேட்டு, இறுதியாக, 'இரும்புக் குதிரை' என்ற படத்தை தேர்வு செய்தார். இதில், இவருக்கு, பைக் ரேஸ் வீரர் வேடம் எனவும், இதனால், சர்வதேச அளவில் பிரபலமான, பைக் ரேஸ் வீரரிடம், முறைப்படி பயிற்சி பெற்றபின்பே, படப்பிடிப்பில் பங்கேற்றார் எனவும் முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது, இரும்புக் குதிரைப் படத்தில் பீட்சா டெலிவரி செய்பவராக வருகிறாராம் அதர்வா. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடி ப்ரியா ஆனந்த். இரும்பு குதிரை தவிர, ஈட்டி, கணிதன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் அதர்வா.

இதாங்க கதை...
இது குறித்து அப்படத்தின் இயக்குநரான யுவராஜ் கூறும்போது, ‘பீட்சா டெலிவரி செய்யும் ஒருவன், பிரசினைகளில் சிக்கி எப்படி போராடி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் கதைக்களம் எனத் தெரிவித்துள்ளார்.

டாங்லி....
ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த டாங்லி தான் இப்படத்திலும் வில்லன். மேலும், இப்படம் பைக் ரேஸ் மற்றும் அதில் பங்கு கொள்ளும் வீரர்கள் குறித்தும் பேசுகிறதாம்.

தூள் பறக்கும் காட்சிகள்....
இப்படத்தில், அதர்வாவுக்கும், ஜானிக்கும், பைக் ரேஸில் பங்கேற்கும்போது, நடக்கும் சண்டை காட்சி ஒன்று உள்ளதாம். இதில், ஜானிக்கு ஈடுகொடுத்து துணிகரமாக நடித்துள்ளாராம் அதர்வா.

இத்தாலி...
இப்படத்தில், அதர்வா மற்றும் டாங்லி வரும் முக்கியக் காட்சிகளை இத்தாலியில் படமாக்கியுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











