சிவகார்த்திகேயனின் 25ஆவது படம்.. நடிப்பதற்கு இதுதான் காரணம்.. அதர்வா ஓபன் டாக்

சென்னை: சிவகார்த்திகேயன் காட்டில் வெற்றி மழை பொழிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் கோலிவுட்டில் பலரின் கருத்து. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன், அயலான், மாவீரன் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு ஆகிய படங்களில் நடிக்கிறார். புறநானூறில் எஸ்கேவுடன் ஜெயம் ரவி, அதர்வாவும் நடிக்கிறார்கள். இந்தச் சூழலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணத்தை அதர்வா தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்குள் வந்தவர். இப்போது வெள்ளித்திரையின் சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் அவர். இடையில் அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்போது பலரும், சிவகார்த்திகேயனின் கரியர் இனி அவ்வளவுதான் என்று ஓபனாகவே சொன்னார்கள். ஆனால் அந்த சீன்லாம் இங்கே இல்லை என்பதுபோல் பிரின்ஸ் படத்துக்கு பிறகு அவர் நடித்த மாவீரன் திரைப்படம் மெகா ஹிட்டானது.

sivakarthikeyan atharvaa puranaanooru

அமரன் சிவா: அதேபோல் அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு படங்கள் வெற்றியாக கொடுத்த எஸ்கே மூன்றாவதாக அமரன் படத்தில் நடித்தார். இந்தப் படமும் மெகா ஹிட்டாகி ஹாட்ரிக் ஹிட்டாக வேண்டும் என்பது எஸ்கே ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அதனை நிறைவேற்றும்படி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்திருக்கிறது.

உச்சக்கட்ட மகிழ்ச்சி: இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மட்டுமின்றி எஸ்கேவும் செம ஹேப்பியில் இருக்கிறாராம். மேலும் அடுத்த படங்களுக்கு தனது சம்பளத்தை 60 கோடி ரூபாய்வரை உயர்த்தியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. அடுத்ததாக அவரது கையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு ஆகிய படங்கள் இருக்கின்றன.

தொடங்கிய ஷூட்டிங்: புறநானூறு படம் முதலில் சூர்யாவுக்கு சென்றது. அவர் விலகிய பிறகு உள்ளே வந்தார் சிவா. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும், அதர்வாவும் நடிக்கிறார்கள். படத்தின் பூஜை சமீபத்தில்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புறநானூறு படத்தில் நடிப்பதற்கான காரணத்தை ஓபனாக பேசியிருக்கிறார் நடிகர் அதர்வா.

அதர்வா பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பாலாவின் இயக்கத்தில் பரதேசி படத்தில் நான் நடித்தபோதிருந்தே சுதா கொங்கரா எனக்கு நல்ல பழக்கம். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவர் இயக்குநர் ஆன பிறகு நாம் சேர்ந்து ஒரு படம் செய்வோம் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். தற்போது புறநானூறு படத்துக்கு அழைத்ததும் ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படம் எனது கரியரில் திருப்புமுனை உள்ள படமாக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X