»   »  விஜய் 'தெறி'க்கவிடுவார்னு பார்த்தா செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளாராம்!

விஜய் 'தெறி'க்கவிடுவார்னு பார்த்தா செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் செல்வராகவன் விஜய்யிடம் கதை கூறியுள்ளாராம்.

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைரவா பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

விஜய் 61

விஜய் 61

பைரவா படத்தை அடுத்து விஜய்யை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தெறி படத்தை அடுத்து இயக்கினால் விஜய்யை தான் இயக்குவேன் என்று உள்ள அட்லீ விஜய் 61 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அட்லீ

அட்லீ

விஜய்யின் 61வது படத்தை அட்லீ இயக்க சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் என்று செய்திகள் வெளியாகின. பைரவாவை அடுத்து மீண்டும் தெறிக்க விடப் போகிறார் தளபதி என விஜய் ரசிகர்கள் நினைத்தனர்.

செல்வராகவன்

செல்வராகவன்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறிய நிலையில் செல்வராகவன் விஜய்யை சந்தித்து கதை சொன்னாராம். விஜய்க்கும் கதை பிடித்துவிட்டதாம். இதனால் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்

விஜய்

விஜய் அட்லீ மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதில் யார் விஜய் 61 படத்தை இயக்கப் போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யா

சூர்யா

எஸ் 3 படத்தை அடுத்து முத்தையாவின் இயக்கத்தில் நடிப்பதா அல்லது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதா என்று சூர்யா குழம்பியதாக செய்திகள் வெளியாகின. தற்போது விஜய்யும் அட்லீயா, செல்வராகவனா யாரை முதலில் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்.

English summary
Atlee or Selvaraghavan will get the chance to direct Vijay's 61st film. Wait for the official announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X