கெத்து தினேஷுக்கு 40 வயசு ஆகிடுச்சு.. பா. ரஞ்சித் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாட்டம்.. செம!

சென்னை: "நீ பொட்டு வச்ச தங்க குடம்" என ஊர் முழுக்க கேப்டன் விஜயகாந்த் பாடலுடன் அட்டக்கத்தி தினேஷ் கெத்து தினேஷாக மாறி அசத்தி வரும் நாளாக இன்றைய தினம் அவருக்கு கூடுதல் ஸ்பெஷலாக மாறியுள்ளது. ஆம், அட்டக்கத்தி தினேஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அட்டக்கத்தி படத்தை இயக்கி இயக்குநராக பா. ரஞ்சித் அறிமுகமான நிலையில், அந்த படத்தில் நாயகனாக நடித்து அசத்திய தினேஷ் இன்று 40வது பிறந்தநாளை பா. ரஞ்சித் உடன் இணைந்து கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளன.

attakathi dinesh lubber pandhu pa ranjith

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் 10 கோடிக்கும் அதிக வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளி அசத்தி வரும் நிலையில், அட்டக்கத்தி தினேஷ் தனது பிறந்தநாளையும் நண்பர்களுடன் இணைந்துக் கொண்டாடி வருகிறார்.

கெத்து தினேஷ் பிறந்தநாள்: இதுவரை அட்டக்கத்தி தினேஷ் என தமிழ் சினிமாவில் அழைக்கப்பட்டு வந்த நடிகர் தினேஷை அவரது 40வது பிறந்தநாளில் கெத்து தினேஷாக மாற்றியுள்ளார் லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. திரைக்கதை மற்றும் எழுத்து வலுவாக இருந்தாலே ஒரு கதாபாத்திரத்தை எலிவேட் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். நடிகர் அட்டக்கத்தி தினேஷ் 1984ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வேலூரில் பிறந்தநிலையில், இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பா. ரஞ்சித்துடன் கேக் கட்டிங்: அட்டக்கத்தி தினேஷ் குக்கூ, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, கபாலி, ஒரு நாள் கூத்து, அண்ணனுக்கு ஜெய், களவாணி மாப்பிள்ளை, நானும் சிங்கிள் தான், பல்லு படாம பாத்துக்கோ, ஜே பேபி, லப்பர் பந்து என பல படங்களில் நடித்தாலும் எப்போதுமே பா. ரஞ்சித்தை மறக்காமல் இருந்து வரும் நிலையில், இன்று தனது பிறந்தநாளையும் பா. ரஞ்சித் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ள போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

கலையரசன் கூடவே: பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசனும் கூடவே நின்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பா. ரஞ்சித் இயக்கத்தில் சீக்கிரமே பிர்ஸா முண்டா படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

attakathi dinesh lubber pandhu pa ranjith

தங்கலான் வெற்றி: சியான் விக்ரம், மாளவிகா மோகனனன், பார்வதி, பசுபதி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், அட்டக்கத்தி தினேஷுக்கும் அப்படியொரு பெரிய வெற்றிப் படத்தை பா. ரஞ்சித் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

லப்பர் பந்து ஹிட்: ஜெ. பேபி உள்ளிட்ட படங்கள் பெரிதாக போகாத நிலையிலும் தொடர்ந்து அட்டக்கத்தி தினேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி வந்தார். இந்த லப்பர் பந்து படத்தில் ஹீரோயினின் அப்பா கதாபாத்திரம் என்றாலும், கதையின் நாயகன் தான் என்பதை புரிந்துக் கொண்டு அவர் நடித்தது தான் இத்தனை பெரிய வெற்றிக்கு காரணம் என்கின்றனர். அட்டக்கத்தி தினேஷ் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X