Rajinikanth: மீண்டும் பாயும் புலியாக மாறிய ரஜினிகாந்த். கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்ட ஏவிஎம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். அபூர்வ ராகங்களில் துவங்கிய இவரது பயணம் தற்போது ஜெயிலர், வேட்டையன் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து வருகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இளம் இயக்குனர்கள், முன்னணி இயக்குனர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் கதைக்கும் தன்னுடைய கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1980களில் வெளியான படங்கள் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. தனக்கே உரிய ஒரு ஸ்பெஷல் ஸ்டைலை தன்னுடைய படங்களில் இணைத்து, அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ரஜினிகாந்த். கடந்த 1983ம் ஆண்டில் வெளியான இவரது பாயும் புலி படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றது. ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக்கை தற்போது ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களின் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டில் இந்த மியூசியத்திற்கு ரஜினிகாந்த் விசிட் செய்திருந்தார்.

AVM productions shared Actor Rajinikanth visit to AVM heritage museum photo

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் 600 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் வசூலித்ததாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து கடந்த 9ம் தேதி ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AVM productions shared Actor Rajinikanth visit to AVM heritage museum photo

வேட்டையன் படம்: இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி போலீஸ் அதிகாரி காஸ்ட்யூமில் ரஜினிகாந்த் பங்கேற்ற சூட்டிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஏவிஎம் மியூசியத்தில் கடந்த ஆண்டு சென்று பார்வையிட்ட ரஜினியின் புகைப்படம் ஒன்றை தற்போது அந்நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பாயும் புலி என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்திய Suzuki பைக் அந்த மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

AVM productions shared Actor Rajinikanth visit to AVM heritage museum photo

ஏவிஎம் மியூசியத்தில் ரஜினிகாந்த்: கடந்த ஆண்டு மியூசியத்திற்கு விசிட் அடித்த ரஜினிகாந்த், மலரும் நினைவுகளாக அந்த Suzuki பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியான பாயும் புலி படத்தில் இந்த Suzuki பைக்கை பயன்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த். அந்த கால இளைஞர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை இந்த பைக் பெற்றது. தற்போது ஆக்ஷன் படங்கள் அதிகமாக வெளியாகிவரும் சூழலில் 1983ம் ஆண்டிலேயே இந்தப் படத்தில் ஜூடோ ரத்னம் அமைத்திருந்த ஆக்ஷன் காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

பாயும்புலி வாகனத்தில் ரஜினிகாந்த்: தற்போது ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் ரஜினியின் கடந்த ஆண்டு புகைப்படம் மட்டுமில்லாமல் பாயும் புலி படத்தில் அவர் பயன்படுத்திய சுசுகி பைக்கின் விவரங்களையும் தெரிவித்துள்ளது. RV90 1976 மாடலான இந்த பைக் அந்த கால இளைஞர்களை எப்படி மயக்கியது, அதிலும் பொங்கல் ரிலீசாக வெளியான பாயும் புலி படம் எப்படி ரசிகர்களை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வரவழைத்தது என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஐதராபாத்தில் நடிகர் ஜீவா உள்ளிட்டவர்களின் சிசிஎல் டீமுடன் புகைப்படங்களை எடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படங்களும் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X