6 வயதிலேயே சிறந்த நடிப்புக்காக ஜனாதிபதியிடம் தங்கப் பதக்கம் பெற்ற கமல்!

By Shankar

கமல் ஹாஸன்.... நடிப்பில் சிகரம் தொட்ட மாபெரும் திரைக்கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்த மகா நடிகன்.

இன்று அவரது வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு பொன்னான நாள்தான். காரணம், கலைஞர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்குரிய நியாயமான அங்கீகாரம் வேண்டும் எனக் கூறி வருபவர் கமல்.

அந்த வகையில், அவருக்கு இந்த விருது இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்பே கூட கிடைத்திருக்க வேண்டும். காரணம், திரைத்துறையில் அவர் செய்துள்ள சாதனைகள் அவ்வளவு.

விருதுகள்

விருதுகள்

விருதுகள், பாராட்டுகள் கமலுக்கு புதிதல்ல. அவரது திரைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு இந்த இரண்டும் கிடைத்து வந்திருக்கின்றன.

ஆறு வயதில்...

ஆறு வயதில்...

சொல்லப் போனால் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான (குழந்தை நட்சத்திரம்) விருதைப் பெற்றவர் கமல். களத்தூர் கண்ணம்மா படத்துக்காக அவருக்கு ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் கிடைத்தது.

நான்கு முறை தேசிய விருது

நான்கு முறை தேசிய விருது

சிறந்த நடிகருக்காக நான்கு முறை தேசிய விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார் கமல் ஹாஸன். மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக இந்த விருதுகள் அவருக்குக் கிடைத்தன.

எட்டு முறை மாநில அரசு விருது

எட்டு முறை மாநில அரசு விருது

தமிழக அரசின் கலைமாமணி மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றுள்ளார் கமல். தமிழக அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டு முறை வென்ற சாதனையாளர் கமல் ஹாஸன். பதினாறு வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் போன்ற படங்களுக்காக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

17 முறை பிலிம்பேர் விருதுகள்

17 முறை பிலிம்பேர் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள் (தெற்கு) பெற்றதில் புதிய சாதனை நிகழ்த்தியவர் கமல். 'போதும்பா.. எனக்கு இனி பிலிம்பேர் விருது வேணாம். புதியவர்களுக்குக் கொடுங்கள்' என்று கூறியவர் கமல் ஒருவராகத்தான் இருக்கும். 22 முறை இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட கமல், 17 முறை விருதுகளை வென்றுள்ளது, உலகில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை!

சாகர், விராசத் படங்களுக்காக அவர் பெற்ற இரு பிலிம்பேர் விருதுகளையும் சேர்த்து, மொத்தம் 19 விருதுகள்!!

நந்தி விருது

நந்தி விருது

ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம், இந்துருடு சந்துருடு போன்ற படங்களுக்காகப் பெற்றுள்ளார்.

வி சாந்தாராம் விருது

வி சாந்தாராம் விருது

மராட்டிய அரசு வழங்கும் வி சாந்தாராம் விருதினை தனது பம்மல் கே சம்பந்தம் மற்றும் தசாவதாரம் படங்களுக்காக வென்றுள்ளார் கமல்.

சர்வதேச விருதுகள்

சர்வதேச விருதுகள்

கொரியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்துக்கான விருதினை விருமாண்டி படத்துக்காகப் பெற்றுள்ளார். ராட்டர்டாமில் நடந்த விழாவில் தனது ஹே ராம் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றார்.

பிற விருதுகள்

பிற விருதுகள்

இவை தவிர இன்னும் ஏராளமான விருதுகள் கமலுக்கு கிடைத்துள்ளன. கேரள அரசின் சிறப்பு விருது, மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஆபிரகாம் கோவூர் தேசிய விருது, சிஎன்என் ஐபிஎன் விருது, ஸ்டார் விஜய் டிவி விருதுகள், ஃபிக்கியின் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருது, ஜீ டிவி விருது, கவுரவ டாக்டர் பட்டம் என பட்டியல் நீள்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X