»   »  2ம் பாகத்திற்காக இன்னும் 20 கிலோ எடை அதிகரிக்கப் போகும் "பாகுபலி" பிரபாஸ்

2ம் பாகத்திற்காக இன்னும் 20 கிலோ எடை அதிகரிக்கப் போகும் "பாகுபலி" பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தை விட பாகுபலி 2 படத்தில் பிரபாஸ் தனது உடல் எடையை இன்னும் அதிகரிக்க இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாகுபலி முதல் படத்தின் போது 62 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்து, 82 கிலோ உடல் எடையுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்து இருந்தார் பிரபாஸ்.


தற்போது பாகுபலி 2 படத்திற்காக இன்னும் 18 கிலோ எடையை அதிகரித்து சுமார் 100 கிலோ தோற்றத்துடன் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பாகுபலி

பாகுபலி

ராஜமௌலியின் பாகுபலி படத்திற்காக சுமார் 3 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்து இருந்தார் பிரபாஸ். மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக 1.5 கோடி செலவில் உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி தனது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, உடல் எடையை 20கிலோ அதிகரித்து இருந்தார்.


பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 2 ம் பாகத்திற்கு உலகளவில் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. எனவே முதல் பாகத்தை விடவும் இந்தப் பாகத்தை மிகவும் பிரமாண்டமாக எடுக்கவிருக்கிறார் ராஜமௌலி.


ஆஜானுபாகுவான

ஆஜானுபாகுவான

பாகுபலி 2 ம் பாகத்தில் தோள்கள் மற்றும் மார்புப் பகுதியை அதிகரித்து கம்பீரமான தோற்றத்துடன் அமரேந்திர பாகுபலியாய் மாறவிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தில் 100 கிலோ உடல் எடையுடன் பிரபாஸ் தோன்றவிருக்கிறார். இதற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் பிரபாஸ் இறங்கியிருக்கிறார்.


முதல் பாகத்தில்

முதல் பாகத்தில்

முதல் பாகத்தில் நடித்த ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இந்தப் பாகத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விடவும் அதிகமான பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி.


பாகுபலி 2 எப்போ வரும்...


English summary
Baahubali 2: The latest Buzz in tollywood hero Prabhas will be gaining 100 kilos for his role as he has to wear Armour and swing sword more that the earlier part.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil