பிரபாஸுக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா?..டார்லிங்குனு யார சொல்லி இருக்காரு!

சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார். மாஸ் ஹிட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை குழப்பம் அடையச் செய்துள்ளது.

நடிகர் பிரபாஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த முதல் படமே வெற்றி அடைந்த நிலையில், வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிகாடு போன்ற வெற்றிப் படங்களைக் நடித்தார். இதையடுத்து, 2015ம் ஆண்டு பாகுபலி முதல் மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் படத்தில் நடித்தார். இவ்விரு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக மாறியதை அடுத்து, பான் இந்திய நடிகராக மாறினார்.

Baahubali Actor Prabhas Instagram post trending on social media

பாகுபலி ஸ்டார்: பாகுபலி படத்திற்கு பின் இவர் நடித்த சாஹோ படம் வசூல் ரீதியில் ஓரளவு வசூலை பெற்றாலும், நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து வெளியான ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய இரண்டும் பெரிய தோல்விப்படங்களாக அமைந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு சலார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் பிரபாஸ். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது.

கல்கி 2898 ஏடி: தற்போது பிரபாஸ், தெலுங்கில் மகாநடி உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து வருகிறார்.தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி ரிலீசாக உள்ளது.

Baahubali Actor Prabhas Instagram post trending on social media

டார்லிங்: இப்படி அடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், "டார்லிங்....இறுதியாக, மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவர் நம் வாழ்க்கையில் நுழைய உள்ளார்... காத்திருங்கள் செயாண்டி..." என்று ஒரு பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் யாரை டார்லிங் என்று சொல்லுகிறார் ஒருவேளை பிரபாஸுக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா? என்று அந்த பதிவிற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X