ஹீரோ .. ஹீரோ ..
தமிழ் சினிமா ரசிகர்களை மொட்டையடிக்கும் முயற்சியில் பாபா படத் தயாரிப்புக் குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ கேசட் வரும் 25ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யப்படுவது தானே வழக்கம். ஆனால், பாபா படத்தின் ஆடியோ கேசட் வாங்கவே ரிசர்வ் செய்யவேண்டும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேசட்டை வாங்க நேற்று முதல் கூப்பன்கள் விற்கப்பட்டு வருகின்றன. இந்தக்கூப்பன் வைத்திருப்பவர்களுக்குத் தான் பாபா படத்துக்கான டிக்கெட் வாங்கவும் முன்னுரிமை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூப்பன்களின் விற்பனை பாபா படம் ரிலீஸ் ஆக உள்ள தியேட்டர்களில் நேற்று முதல் நடந்து வருகிறது. இந்தக் கூப்பன்வைத்திருப்பவர்கள் வரும் 25ம் தேதி மீண்டும் தியேட்டர்களுக்கு வந்து கேசட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூப்பன் வைத்திருப்பவர்களுக்குத் தான் இந்தப் படத்துக்கான சினிமா டிக்கெட் ரிசர்வ் செய்யவும் முன்னுரிமைதரப்படுமாம்.
இதனால் இந்தப் கூப்பனை வாங்க நேற்று காலை 4 மணிக்கே பல தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கூடிவிட்டனர். கவுண்டர்கள்திறக்கப்பட்டவுடன் பூசணிக்காய் உடைப்பது, சூடம கொளுத்துவது போன்ற பக்தி சம்பிரதாயங்களை ரசிகர்களே செய்துமுடித்தனர். பின்னர் ரூ. 50 கொடுத்து இந்தக் கூப்பன்களை வாங்கிச் சென்றனர். இந்த 50 ரூபாய் என்பது அடிமட்டத் தமிழ்ரசிகர்கள் சம்பாதிக்கும் ஒரு நாள் கூலி என்பது குறிப்பிடத்தக்கது.
கேசட் வாங்க ரூ. 50 செலவு செய்துள்ள இந்த ரசிகர்கள், படம் பார்க்க ரூ. 100 வரை செலவு செய்தாக வேண்டும்.
ஏகப்பட்ட ஹைப்கள் காரணமாக பரபரப்புடன் இந்தப் படம் வெளியாவாதால் இதை எப்படியாவது முதலில் பார்த்துவிடவேண்டும் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. உயிரைக் கொடுத்தாவது தலைவர் படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற வெறியுடன்இருக்கும் ரசிகர்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு அவர்களை மொட்டையடிக்கும் முயற்சியில் பாபா குழு இறங்கியுள்ளதுதான் வேதனை தருகிறது.
இந்த பாபா படம் மூலம் ரூ. 80 முதல் ரூ. 100 கோடி வரை ரஜினிக்கு லாபம் கிடைக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











