பப்லு பிரித்விராஜை சுற்றி ஒரே கன்னிப் பெண்கள் கூட்டமா இருக்கே.. ஒருவருடன் மட்டும் அதிக போட்டோஸ்!
சென்னை: 59 வயதை கடந்த நடிகர் பப்லு பிரித்விராஜ் இன்னமும் செம ஃபிட்டாக தனது உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து வரும் நிலையில், 3 இளம் பெண்களுடன் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய, அதில் ஒருவருடன் மட்டும் தனியாக நின்று பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டதை போஸ்ட் செய்த நிலையில், நெட்டிசன்கள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
கே. பாலசந்தர் இயக்கத்தில் 1971ம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் சிறு வயதிலேயே அறிமுகமானவர் தான் பப்லு பிரித்விராஜ். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில், ஹீரோவாக கே. பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை படத்திலும் நடித்திருந்தார்.

ஆனால், இவருக்கு அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் வில்லன் கதாபாத்திரங்கள் வர அதையும் வேண்டாம் என ஒதுக்காமல் நடித்துக் கொடுத்தார். அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா படத்தில் இவர் நடித்த நடிப்பு என்றுமே மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
சிம்புவுடன் டிஆர்பி சண்டை: ரியாலிட்டி ஷோக்களில் எல்லாம் ரியாலிட்டி இருக்காது, வெறும் ஷோ மட்டுமே இருக்கும் என்பதை ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி பல வருடங்களுக்கு முன்பே அம்பலப்படுத்தியது. நடுவராக இருந்த சிம்புவுக்கும் டான்ஸராக இருந்த பப்லுவுக்கும் இடையே சண்டை வெடித்து சிம்பு அந்த செட்டை விட்டே வெளியேறியது எல்லாம் பக்கா டிராமா என பப்லுவே பின்னர் அளித்த பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்பே அது ஸ்டேஜ் செட்டப் தான் என்பதை அப்போதே ரசிகர்கள் கண்டு பிடித்தது தான் சுவாரஸ்யம்.
விஜய் சேதுபதிக்கு வில்லன்: பல வருடங்களாக நடித்து வரும் பப்லு பிரித்விராஜ் சமீப காலமாக பான் இந்தியா நடிகராகவே மாறிவிட்டார். அனிமல் படத்தில் குட்டி வில்லனாக நடித்த இவர், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தில் சாய் பல்லவிக்கு அப்பாவாக நடித்திருந்தார். கடைசியாக இந்த ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் ஹீரோயின் ருக்மினி வசந்துக்கு ஸ்டெப் ஃபாதராகவும் விஜய் சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.
தோழிகளுடன் பிரித்விராஜ்: அதிகளவில் பார்ட்டிகளுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்வது என வாழ்க்கையை கழித்து வருகிறார் பிரித்விராஜ். பீனா என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட பப்லு 2022ம் ஆண்டு அவரை பிரிந்தார். 28 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்த பிரித்விராஜ் ருக்மினி ஷீத்தல் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்குள் பிரித்விராஜை பிரேக்கப் செய்துவிட்டு கிளம்பி விட்டார் ஷீத்தல். இந்நிலையில், 3 இளம் தோழிகளுடன் பிரித்விராஜ் பார்ட்டி பண்ண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஒருவருடன் மட்டும் அதிக போட்டோஸ்: மேலும், அதில், ஒரு தோழியுடன் மட்டும் அதிகமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை பிரித்விராஜ் ஷேர் செய்துள்ள நிலையில், நெட்டிசன்கள் ஏகப்பட்ட கேள்விகளை கமெண்ட் பக்கத்தில் எழுப்பி உள்ளனர். செலிபிரிட்டி டிசைனர் ஃபயிசா நவீன் உடன் தான் அதிக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரித்விராஜ். நண்பர்களுடன் நீண்ட நாள் கழித்து சந்தித்த சந்திப்பு என்றே பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேறு ஏதாவது என்றால் அவரே வெளிப்படையாக சொல்வார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











