பாலா மீது ஆக்ஷன்? அஜீத்தை மிரட்டிப் பணம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் இயக்குனர் பாலா மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்திடம் சில முன்னணிநடிகர்கள் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.நான் கடவுள் பட விவகாரத்தில் பாலா பெரும் இழுத்தடிப்பு செய்ய மிகுந்த பொறுமை காத்தார் அஜீத். ஆனால்,கடைசியில் அஜீத்தை தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கிவிட்டார் பாலா.நானும் அஜீத்தும் சேர்ந்து பேசிய இந்த முடிவுக்கு வந்தோம் என பாலா கூறினார். ஆனால், அஜீத் இந்தவிஷயத்தில் வாயே திறக்கவில்லை. ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார்.இதற்கிடையே நான் கடவுள் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை திரும்பக் கேட்டு பாலா தரப்பு அஜீத்திடம்முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.படத்திற்காக பெற்ற அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு பாலா,அஜீத்தைக் கேட்டுள்ளார். சரி என்று அஜீத்தும் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாலா, தயாரிப்பாளர்தேனப்பன், வினியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, மதுரை பைனான்சியர் அன்பு(இவர் சசியின் பினாமி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்) உள்ளிட்ட சிலர் அஜீத்தைசந்தித்தனர்.அந்த சந்திப்பின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் சிலர் அஜீத்தைஒருமையில் அனைத்துப் பேசியதாகவும், அடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து பணத்தைக் கொடுத்து விட்டு அஜீத் அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்தசர்ச்சையில் இப்போது பாலாவின் தலை உருளுகிறது. அவர் அஜீத்தை மிரட்டியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் கொந்தளித்துள்ள அஜீத் ரசிகர்கள் பாலாவின் அலுவலகம் முன் போராட்டம்நடத்தினர். இதைத் தொடர்ந்து பாலாவின் வீடு, அலுவலகம் ஆகியஇடங்களில்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந் நிலையில் அஜீத் விவகாரத்தில் இதுவரை நடிகர் சங்கம் தெரிவிக்காமல் உள்ளது.இதனால் அஜீத் ரசிகர்கள் நடிகர் சங்கம் மீதும் அதிருப்தி அடைந்துள்ளனர். தான்கூப்பிட்ட நிகழ்ச்சிக்கெல்லாம் வராமல் அஜீத் முன்பு பலமுறை புறக்கணித்ததால்,கடுப்படைந்திருந்த விஜயகாந்த் இப்போது அஜீத்துக்கு உதவிக் கரம் நீட்ட மறுப்பதாககூறப்படுகிறது.ஆனால் இதை விஜயகாந்த் மறுத்துள்ளார். அஜீத்திடமிருந்து புகார் வந்தால்உடனடியாக நடவடிக்கையில் இறங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.அதேசமயம், அஜீத் விவகாரத்தில் உடனடிாயக தலையிட்டு பாலா மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று சில முன்னணி நடிகர்கள் விஜயகாந்த்தைவலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், பாலா மீது புகார் கொடுக்க அஜீத் தயாராக இல்லை என்று கூறப்படுவதால்இந்த பிரச்சினை பூடகமாகவே இருந்து வருகிறது.அதேசமயம் விஷயம் வலுத்து வருவதால் விரைவில் நடிகர் சங்கத்தில்இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.இந்த விவகாரம் குறித்து அறிந்த தயாரிப்பு பார்ட்டி ஒருவர் கூறுகையில், பாலா திறமைசாலி தான். ஆனால்,படத்தை எப்போது ஆரம்பிப்பார், எப்போது முடிப்பார் என்று சொல்ல முடியாது. அவரை வைத்து படம்தயாரித்த யாரும் நன்றாக இல்லை.நான் கடவுள் படத்தை வைத்து சில கோடிகள் அடிக்கப் பார்த்தார். முதலில் தனுஷை வைத்து இந்தப் படத்தைஇயக்கப் போவதாக சொல்லி தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் சில கோடிகள் கறந்தார்.பின்னர் அதை விட்டுவிட்டு அஜீத்தை வைத்து படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால்,ரத்னத்தின் படத்தில் நடிக்க அஜீத் மறுத்துவிட்டார். இதையடுத்து தேனப்பனை தயாரிப்பாளர் என்று அறிவித்தார்பாலா.அவரிடம் சில கோடிகள் வாங்கிய பாலா அதில் ஒரு சிறு தொகையை மட்டும் அஜீத்துக்குத் தந்தார். பின்னர்ஆர்யாவை ஹீரோ ஆக்கிவிட்டு அஜீத்திடம் பணத்தைக் கேட்டார். ஆனால், படத்தில் இருந்து விலக அஜீத்மறுத்தார்.இதையடுத்தே அவரை ஓட்டலுக்கு வரவழைத்து மிரட்டியுள்ளனர். கொடுத்த காசை வட்டியுடன் திரும்பக் கேட்டுமிரட்டியிருக்கிறார்கள். கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்த பைனான்சியர்கள் அஜீத்தை மிரட்டி அவரிடமிருந்துபணத்தை வாங்கித் தந்துள்ளனர் என்றார்.பாலாவுக்கு முன்னாள் மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மாமா முறை என்பது குறிப்பிடத்தக்கது.

By Staff

அஜீத்தை மிரட்டிப் பணம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் இயக்குனர் பாலா மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்திடம் சில முன்னணிநடிகர்கள் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான் கடவுள் பட விவகாரத்தில் பாலா பெரும் இழுத்தடிப்பு செய்ய மிகுந்த பொறுமை காத்தார் அஜீத். ஆனால்,கடைசியில் அஜீத்தை தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கிவிட்டார் பாலா.

நானும் அஜீத்தும் சேர்ந்து பேசிய இந்த முடிவுக்கு வந்தோம் என பாலா கூறினார். ஆனால், அஜீத் இந்தவிஷயத்தில் வாயே திறக்கவில்லை. ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார்.

இதற்கிடையே நான் கடவுள் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸை திரும்பக் கேட்டு பாலா தரப்பு அஜீத்திடம்முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

படத்திற்காக பெற்ற அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு பாலா,அஜீத்தைக் கேட்டுள்ளார். சரி என்று அஜீத்தும் ஒப்புக் கொண்டார்.


இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாலா, தயாரிப்பாளர்தேனப்பன், வினியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, மதுரை பைனான்சியர் அன்பு(இவர் சசியின் பினாமி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்) உள்ளிட்ட சிலர் அஜீத்தைசந்தித்தனர்.

அந்த சந்திப்பின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் சிலர் அஜீத்தைஒருமையில் அனைத்துப் பேசியதாகவும், அடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பணத்தைக் கொடுத்து விட்டு அஜீத் அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்தசர்ச்சையில் இப்போது பாலாவின் தலை உருளுகிறது. அவர் அஜீத்தை மிரட்டியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் கொந்தளித்துள்ள அஜீத் ரசிகர்கள் பாலாவின் அலுவலகம் முன் போராட்டம்நடத்தினர். இதைத் தொடர்ந்து பாலாவின் வீடு, அலுவலகம் ஆகியஇடங்களில்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் அஜீத் விவகாரத்தில் இதுவரை நடிகர் சங்கம் தெரிவிக்காமல் உள்ளது.இதனால் அஜீத் ரசிகர்கள் நடிகர் சங்கம் மீதும் அதிருப்தி அடைந்துள்ளனர். தான்கூப்பிட்ட நிகழ்ச்சிக்கெல்லாம் வராமல் அஜீத் முன்பு பலமுறை புறக்கணித்ததால்,கடுப்படைந்திருந்த விஜயகாந்த் இப்போது அஜீத்துக்கு உதவிக் கரம் நீட்ட மறுப்பதாககூறப்படுகிறது.

ஆனால் இதை விஜயகாந்த் மறுத்துள்ளார். அஜீத்திடமிருந்து புகார் வந்தால்உடனடியாக நடவடிக்கையில் இறங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.


அதேசமயம், அஜீத் விவகாரத்தில் உடனடிாயக தலையிட்டு பாலா மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று சில முன்னணி நடிகர்கள் விஜயகாந்த்தைவலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பாலா மீது புகார் கொடுக்க அஜீத் தயாராக இல்லை என்று கூறப்படுவதால்இந்த பிரச்சினை பூடகமாகவே இருந்து வருகிறது.

அதேசமயம் விஷயம் வலுத்து வருவதால் விரைவில் நடிகர் சங்கத்தில்இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த தயாரிப்பு பார்ட்டி ஒருவர் கூறுகையில், பாலா திறமைசாலி தான். ஆனால்,படத்தை எப்போது ஆரம்பிப்பார், எப்போது முடிப்பார் என்று சொல்ல முடியாது. அவரை வைத்து படம்தயாரித்த யாரும் நன்றாக இல்லை.

நான் கடவுள் படத்தை வைத்து சில கோடிகள் அடிக்கப் பார்த்தார். முதலில் தனுஷை வைத்து இந்தப் படத்தைஇயக்கப் போவதாக சொல்லி தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் சில கோடிகள் கறந்தார்.

பின்னர் அதை விட்டுவிட்டு அஜீத்தை வைத்து படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால்,ரத்னத்தின் படத்தில் நடிக்க அஜீத் மறுத்துவிட்டார். இதையடுத்து தேனப்பனை தயாரிப்பாளர் என்று அறிவித்தார்பாலா.


அவரிடம் சில கோடிகள் வாங்கிய பாலா அதில் ஒரு சிறு தொகையை மட்டும் அஜீத்துக்குத் தந்தார். பின்னர்ஆர்யாவை ஹீரோ ஆக்கிவிட்டு அஜீத்திடம் பணத்தைக் கேட்டார். ஆனால், படத்தில் இருந்து விலக அஜீத்மறுத்தார்.

இதையடுத்தே அவரை ஓட்டலுக்கு வரவழைத்து மிரட்டியுள்ளனர். கொடுத்த காசை வட்டியுடன் திரும்பக் கேட்டுமிரட்டியிருக்கிறார்கள். கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்த பைனான்சியர்கள் அஜீத்தை மிரட்டி அவரிடமிருந்துபணத்தை வாங்கித் தந்துள்ளனர் என்றார்.

பாலாவுக்கு முன்னாள் மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மாமா முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: bala to face the music soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X