வாத்தி ஹீரோயினிடம் ரெமோ ஆக்டிங்.. ஏர்போர்ட்டில் ரசிகரிடம் அந்நியனாக மாறிய பாலகிருஷ்ணா.. என்ன ஆச்சு?

ஹைதராபாத்: கோலிவுட்டில் கார்த்தியின் வா வாத்தியார் படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போக காரணமே நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 அதே தேதியில் வருவது தான் காரணம் எனக் கூறுகின்றனர். அகண்டா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், அகண்டா 2 படத்தை இந்தியளவில் படக்குழு ப்ரோமோட் செய்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் வாத்தி பட புகழ் சம்யுக்தா மேனன் மேடையில் பேசும், பின்னாடி இருப்பவரிடம் பேசிக் கொண்டிருந்த பாலய்யாவை சட்டென அவர் திரும்பிப் பார்த்ததும் பாலகிருஷ்ணா சிவகார்த்திகேயன் மாதிரி மாறி சமாளிஃபிகேஷன் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு அடுத்த ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Balakrishna gets angry on a fan at Airport during Akhanda 2 promotion shocks fans

பாலகிருஷ்ணா விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் மீது கோபப்பட்ட வீடியோ தான் அது. தனது ஒட்டுமொத்த நிதானத்தையும் இழந்துவிட்டார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

வாத்தி ஹீரோயினிடம் ரெமோ ஆக்டிங்: "பாசத்துக்கு முன்னாடி பனி... பகைக்கு முன்னாடி புலி..." என பாலய்யாவின் சமீபத்திய ரெமோ ஆக்டிங்கை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். வைரலாகி வரும் இந்த வீடியோவை நடிகை சம்யுக்தா இந்நேரம் சோஷியல் மீடியாவில் பார்த்து என்ன ரியாக்ட் செய்திருப்பார் என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே.

அவன் என் கண் முன்னாடியே நிற்கக் கூடாது: இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், விமான நிலையத்தில் இன்னொரு சம்பவத்தையும் பாலகிருஷ்ணா செய்துள்ளார். ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றா அடித்து விடுவார் என்று ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், விசாகப்பட்டினத்துக்கு அகண்டா 2 ப்ரோமோஷனுக்காக வந்த பாலகிருஷ்ணா முதலில் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்து ஆட்டோகிராஃப் எல்லாம் போட்டுள்ளார்.

ஆனால், ஒரு ரசிகர் தொடர்ந்து பாலகிருஷ்ணாவை நெருங்கி வந்துக் கொண்டிருந்த நிலையில், தனது பாதுகாவலரை அழைத்து அந்த நபரை அருகில் விடவே கூடாது என்றும் அவன் என் கண் முன்னாடி வரவே கூடாது என கத்தியது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் அகண்டா 2 பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X