சரக்கு அடித்துவிட்டு அஞ்சலியிடம் தகாத முறையில் நடந்தாரா பாலகிருஷ்ணா?.. சர்ச்சை வீடியோ

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் பாலகிருஷ்ணா. பாலைய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் செய்யும் செயல் ஒவ்வொன்றும் சர்ச்சையை சந்திப்பவை. அதேபோல் அவரது படங்களில் வரும் காட்சிகளும் கடுமையான ட்ரோலுக்கு உள்ளாகுபவை. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் செய்திருக்கும் செயல் ஒன்று பெரும் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

என்டிஆரின் ஆறாவது மகனான பாலகிருஷ்ணாவும் தனது தந்தையின் வழியில் பயணித்து சினிமாவில் நடிகரானார். என்டிஆர் இயக்கிய தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் 1983ஆம் ஆண்டுவரை கதாநாயகனாக அறிமுகமாகாமல் இருந்தார்.

Balakrishna Anjali

ஹீரோ பாலகிருஷ்ணா: இந்தச் சூழலில் சந்தானபாரதி - பி.வாசு இணைந்து தெலுங்கில் இயக்கிய சாகசமே ஜீவிதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சாகசமே ஜீவிதம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமானார். அந்தவகையில் 1985ஆம் ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகின.

தொடர்ந்து ஹீரோதான்: அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி ரிசல்ட்டுகளை கொடுத்தன. தோல்வி படங்கள் வந்தாலும் பாலகிருஷ்ணாவுக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதன் காரணமாக நூறு படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்துவிட்டார் பாலகிருஷ்ணா. இதற்கிடையே அரசியலில் என்ட்ரி ஆகி தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியாகவும் இருக்கிறார் அவர்.

சர்ச்சைகளின் நாயகன்: கதாநாயகனாக அவர் பிரபலமடைந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியும் பிரபலம் அடைந்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய காலணியை அணிவிக்க சொல்லி உதவியாளர் ஒருவரை அடித்தது, தன்னுடன் செல்ஃபி எடுக்க வருபவர்களின் மொபைல் ஃபோன்களை தட்டிவிடுவது, பட விழா ஒன்றில் தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தன்னுடைய மொபைல் ஃபோனை அசிஸ்டெண்ட்டிடம் மேடையில் இருந்தபடி தூக்கி எறிந்தது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் அதகளமாகத்தான் இருக்கும்.

Balakrishna Anjali

அறிவியலுக்கு எதிரானவரா?: அதேபோல் பாலகிருஷ்ணாவின் படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் பெரும் ட்ரோல்களை சந்திப்பவை. உதாரணமாக அவர் நடித்த பல்நதி பிரமநாயுடு படத்தில் ஒற்றை விரலில் அதிவேக ரயிலை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது, விஜயேந்திர வர்மா படத்தில் துப்பாக்கியில் சுட்டு பறக்கும் விமானத்தை வீழ்த்தும் காட்சி, அகண்டா படத்தில் ஒரே உதையில் ஸ்கார்ப்பியோ காரை பல கிலோமீட்டர் திருப்பி அனுப்புவது என அவர் நடித்த பல காட்சிகள் அறிவியலுக்கு எதிராக இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு. கடைசியாக அவரது நடிப்பில் பகவந்த் கேசரி என்ற படம் ரிலீஸானது.

கேங்ஸ் ஆஃப் கோதாவரி: சூழல் இப்படி இருக்க அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி பட விழா நேற்று நடந்தது. அதில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பாலகிருஷ்ணா அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் ஒரு வாட்டர் பாட்டிலும், இன்னொரு வாட்டர் பாட்டிலில் மது நிறத்தில் திரவம் இருந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த பாட்டிலில் இருந்தது மதுவா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். அதேபோல் நிகழ்ச்சி நடந்தபோது மேடையில் வைத்து அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்டார். அதையும் பார்த்த ரசிகர்கள், பாலைய்யா சரக்கை போட்டுவிட்டு அஞ்சலியிடம் இப்படி நடந்துகொண்டாரா?.. அவரை கட்டுப்படுத்த யாருமே இல்லையா என்று கேள்வி கேட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X