தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.. பராசக்தி படத்தில் முக்கிய பிரபலம்,, லீக்கான புகைப்படம்!
சென்னை: அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது. பராசக்திபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இலங்கையில் தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடக்கும் இப்படத்தின் படப்பில் முக்கிய பிரபலம் ஒருவர் இருக்கும் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அவரை பார்த்து தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என நெட்டிசன்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.

பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது. சுதா கொங்கராவின் கனவுப்படமாக இது உருவாகிறது. சூரரை போற்று படத்திற்கு பிறகு இப்படத்தை பெரிதாக நம்பியுள்ளார். இலங்கையில் நடந்து வரும் படப்பிடிப்பு முக்கியமான பகுதிகளின் காட்சிகள் படமாக்கபட்டு வருகின்றன. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அவருக்கு இது 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
குருசோமசுந்தரம்: ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் குரு சோமசுந்தரம். இவர் ஜோக்கர், ஜிகர்தண்டா, குடும்பஸ்தன் படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் இவர் நடித்த மின்னல் முரளி திரைப்படம் பேண்டஸி படமாக வெளியாகி ஹிட் அடித்தது. பாட்டில் ராதா படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலயில், பராசக்தி படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரம்மாண்ட செட்: பராசக்தி படத்திற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் டெல்லி போன்று பிரத்யேகமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நாளுக்கு நாள் இப்படத்தில் முக்கிய நடிகர்கள் கமிட் ஆகி வருகின்றனர். பீரியட் படமாக வெளியாவது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு இலங்கை ரசிகர்கள் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுக்க சூழ்ந்தனர். அன்புடன் ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்த வீடியோ வைரலானது.
பசில் ஜோசப்: குஞ்சிராமாயணம் படத்தின் மூலம் மலையாளம் திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பசில் ஜோசப். முதல் படம் எதிர்பார்த்த அளவில் கவனம் பெறவில்லை. ஆனால், நல்ல படம் என்ற பெயரை மட்டுமே பெற்றது. அடுத்து அவர் இயக்கிய மின்னல் முரளி திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். பின்பு ஜய ஜய ஜய ஜய ஹே படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படம் இயக்குவதற்கு பிரேக் கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மலையாள விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவை போன்று எந்த பக்கம் திரும்பினாலும் பசில் ஜோசப் படத்தின் போஸ்டர்கள் இல்லாத படமே இல்லை. விஜய் சேதுபதி ஒரே வருடத்தில் 7 படங்களில் நடித்தது போன்று பசில் ஜோசப்பும் மலையாள திரையுலகின் விஜய் சேதுதியாக வலம் வருகிறார். ஒரு வருடத்தில் அவர் நடித்த 8 படங்களில் 7 படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. அதில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்துள்ளது. இதனால், மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக பசில் ஜோசப் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதார்த்தமான மனிதர்: பாட்டில் ராதா படத்தின் புரோமோஷன் பணிகளில் இருந்த குருசோமசுந்தரம் பசில் ஜோசப்புடன் பணியாற்றிய அனுபவம் குறித்த கேள்விக்கு சிரித்துகொண்டே பதில் அளித்தார். அப்போது, பசில் ஜோசப்பை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஒரு மனுஷன் இருக்கிறார்களா என்று வியந்திருக்கிறேன். அவருடன் இருந்தால் சிரித்துகொண்டே இருக்கலாம். காரணம் தெரியாது. அவர் மொக்கையா பன்றது லூட்டியாக இருக்கும். பழக இனிமையானவர். அவர் மேல கோபமே வராதுங்க. மீண்டும் அவரை பார்த்தால் சிரிச்சுட்டே இருக்கத்தான் தோணும். கலகல பேசிட்டு அருமையாக பண்ணுவார். அவரோட இருந்தா ரொம்ப இயல்பா இருப்பேன் எனவும் குரு சோமசுந்தரம் தெரிவித்தார்.
பசில் ஜோசப் நஸ்ரியாவுடன் இணைந்து சூக்ஷமதர்ஷினி என்ற படத்தில் நடித்தார். இப்படமும் ஒரு காமெடி படமாக இருந்தது. வசூலையும் வாரி குவித்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பிறகு நஸ்ரியா நடிக்கும் என்பதாலும் முதல் முறையாக பசில் ஜோசப் என்ற புதுமுக நடிகருடன் இணைந்து பட்டையை கிளப்பியிருப்பார் நஸ்ரியா. பின்னர், இருவரும் சேர்ந்து கொடுத்த பேட்டிகளும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. ஜாலியாகவம், லூட்டி அடித்து கொண்டு இருக்கும் இவர்களை பார்த்தால் நடிக்கத்தான் வந்திருக்காங்களா என்று கூட தோன்றும். ஆனால், படத்திற்கும் இவர்கள் செய்ற அலும்புக்கம் சம்பந்தமே இல்லைங்க. நடிப்புல 2 பேருமே மிரட்டி விட்டாங்க.
முதல் சீரிஸான படம்: பசில் ஜோசப் நடிப்பில் வெளியான பொன்மான் திரைப்படத்திற்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பை விட ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி கலந்த காதல் படங்களில் மட்டுமே தோன்றிய பசில் ஜோசப் இப்படத்தில் வித்தியாசமான அனுபவத்தை தந்திருக்கிறார். டார்க் காமெடி வகையை சேர்ந்த படமாக பெ்ான்மான் இருக்கிறது. பசில் ஜோசப்பும், லிஜோ மோல் ஜோஸூம் நடிப்பில் அசத்தியுள்ளார். முதல் முறையாக ஒரு சீரிஸான படங்களில் நடித்து பாராட்டை பெற்றிருக்கிறார் பசில் ஜோசப். லிஜோ மோலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஜெய்பீம் படத்தில் அவரது நடிப்பு பார்ப்பவரை கண்ணீர் வரைவைத்து விட்டார்.
புகைப்படம் லீக்: மலையாளத்தில் பிஸியாக இருக்கும் பசில் ஜோசப், பராசக்தி படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. போலீஸ் உடையில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதில், அவர் மாஸ்க் அணிந்து இருக்கிறார். அவர் பக்கத்தில் ரவி மோகன் அமர்ந்திருக்கிறார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என கேட்க தொடங்கிவிட்டனர். பசில் ஜோசப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இவர் நடித்த படங்களை ரசிகர்கள் தேடி தேடி பார்த்து வருகின்றனர். பொன்மான் திரைப்படம் ஜியோஹாட்ஸ்டாரில் சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தை பார்த்து ஆரஹா ஓஹோ என பாராட்டி வருகின்றனர். வலைதளங்களில் படத்தின் க்ளிப்பிங் வீடியோஸை வெளியிட்டு செம படம் என ரிவியூவ் சொல்வதால் திரை ரசிகர்களும் தேடி பிடித்து பார்க்க தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











