‘கமல் ஹாசனின் டார்ச்சர் தாங்காமல் வெளிநாட்டுக்கு ஓடிய அபிராமி’.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

சென்னை: கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்தவர் அபிராமி. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக அபிராமியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. படத்தை இப்போது பார்த்தாலும் அவரது நடிப்பை ஆச்சரியத்துடனேயே எல்லோரும் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருமாண்டி படத்துக்கு பிறகு பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிராமி அதற்கு பிறகு காணாமல் போனார். இந்தச் சூழலில் அவர் பற்றி பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

Bayilvan Ranganathan Controversial Speech About Kamal And Abirami

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.

கே.ராஜனின் பதிலடி: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.

புதிய பரபரப்பு: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் கமல் ஹாசன் மற்றும் அபிராமி குறித்து ஒரு வீடியோவில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் பேசிய அவர், "அபிராமி நல்ல நடிகை. அவர் கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கமல் ஹாசன் அபிராமியை ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார். இதன் காரணமாகவே அபிராமி வெளிநாட்டுக்கு ஓடிப்போய்விட்டார். திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் கமல் ஹாசனுடன் அவர் நடிக்கவிருக்கிறார்" என்றார்.

தக் லைஃப்: மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இதில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். அந்தப் படத்தில் விருமாண்டி அபிராமியும் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X