நடிகைகளை விடவேமாட்டாராம் கமல் ஹாசன்.. ஓவராக பேசிய பிரபலம்.. நிறுத்தவே மாட்டேங்கிறாரே

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படம் தோல்வியடைந்தது. இந்தச் சூழலில் கமல் ஹாசனை பற்றி பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

kamal haasan bayilvan ranganathan indian 2

ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 தோல்வியடைந்தது.

செம ட்ரோல்: முக்கியமாக படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்திருக்கிறது. தியேட்டரில் இருந்தபோதுகூட அளவாகத்தான் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனையடுத்து படத்திலிருந்து பல காட்சிகளை வெட்டி எடுத்து கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர். இதுவரை கமல் ஹாசனின் படங்களிலேயே இந்தியன் 2தான் இவ்வளவு ட்ரோலுக்கு ஆளாகியிருப்பதாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட வேதனையடைந்தனர்.

அன்பறிவ்: இந்தியன் 2வை முடித்திருக்கும் அவர்; கோலிவுட்டில் சண்டை பயிற்சியாளர்களாக கலக்கிவரும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும்; அநேகமாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கருதிவருகின்றனர்.

பயில்வான் வீடியோ: இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "நடிகர்களில் மிகச்சிறந்த நடிகர் என்று கமலை சொல்வார்கள். அதேநேரம் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையை பதம் பார்க்காமல் விடமாட்டார். ஒன்று நடிகையின் உதட்டில் கிஸ் கொடுப்பார் இல்லை பின்புறத்தை கடிப்பார். எல்லா படங்களிலும் நடிகைகளுடன் உருண்டு புரள்வார் கமல் ஹாசன்.

ரஜினி வின்னர்: இதன் காரணமாக ரஜினிக்கும் கமலுக்கும் நடந்த போட்டியில் ரஜினிதான் வென்றார். பெண்கள் ரஜினியின் படங்களை பார்க்க குவிந்தார்கள். கமல் பாடத்தை இளைஞர்கள்தான் முன்வருவார்கள். பெண்கள் யாரும் வரமாட்டார்கள். அதுவும் குடும்ப பெண்கள் எல்லாம் சுத்தமாக வரமாட்டார்கள். கமல் படம் என்றாலே ஆபாசம் இருக்கும் என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே இருக்கிறது. அவர் மேற்கத்திய கலாசாரத்தை பிரதிபலிப்பவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X