Suriya - சூர்யாவுக்கு அதை சொல்லிக்கொடுத்ததே ஜோதிகாதான்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்ஸ்
சென்னை: Suriya (சூர்யா) சூர்யா - ஜோதிகா பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

கங்குவா: எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.
மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.
சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என் ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். மேலும் அந்த ஜோடிதான் அஜித் - ஷாலினிக்கு பிறகு கோலிவுட்டில் பலரும் ஃபேவரைட் ஜோடியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
பயில்வான் சீக்ரெட்: இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சூர்யா - ஜோதிகா பற்றி ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "சூர்யாநடிக்க வந்த புதிதில் ரொம்பவே விமர்சனத்தை சந்தித்தார். ஜோதிகாவுடன் இணைந்து நடித்தபோது சூர்யாவுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தது சூர்யாதான்.
அதாவது சூர்யாவைவிட ஜோதிகா சீனியர். மும்பையை சேர்ந்த அவர் ரொம்பவே மாடர்னான ஆள். அவர்தான் சூர்யாவுக்கு இப்படி நடி அப்படி நடி இந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடு; இந்த மாதிரியான உடைகளை போடு என சொல்லிக்கொடுத்தவர். அதனாலேயே ஜோதிகா மீது சூர்யாவுக்கு காதல் மலர்ந்துவிட்டது. வீட்டில் பல பிரச்னைகளை தாண்டி ஒத்துக்கொண்ட பிறகு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











