கண்ணா.. காட்டுக்குள்ள போன சூப்பர் ஸ்டார் எப்படி கீறார் தெரியுமா.. இங்க சூடும்மா.. செம புரோமோ!

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி குறித்த மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Rajinikanth in Man vs Wild | Thalaiva on Discovery | Into the wild motion poster

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி குறித்த மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா

அவர்களோடு நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அவர்களோடு நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், சூரி என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறது. கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கையாகவும், நயன்தாரா படத்தில் வக்கீலாகவும் நடிப்பதாக தகவல் வெளியானது.

மேன் வெர்சஸ் வைல்டு

மேன் வெர்சஸ் வைல்டு

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் அண்மையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பந்திப்பூர் சரணாலயம்

பந்திப்பூர் சரணாலயம்

பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வன ஆர்வலர்களின் எதிர்ப்பால் 6 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆவலுடன் எதிர்பார்ப்பு

ஆவலுடன் எதிர்பார்ப்பு

இதனால் ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். ஓபாமா, மோடி உள்ளிட்ட பெரும் தலைகள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றதை பெரும் கவுரமாக பார்த்தனர் ரசிகர்கள். எப்போது இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள்.

எனக்கு ஸ்பெஷல்

இந்நிலையில் நிகழ்ச்சியின் இயக்குநரும் தொகுப்பாளருமான பியர் கிரில்ஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் டிவி அறிமுகத்திற்காக தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் மோஷன் போஸ்டருடன் தயாராகிறது! நான் உலகம் முழுவதும் பல நட்சத்திரங்களுடன் பணிபுரிந்திருக்கிறேன், ஆனால் இது எனக்கு ஸ்பெஷல். லவ் இந்தியா என பதிவிட்டிருக்கிறார்.

மோஷன் போஸ்டர்

அந்நிகழ்ச்சிக்கான மோஷன் போஸ்டரையும் பியர் கிரில்ஸ் வெளியிட்டுள்ளார். இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்த போஸ்டரையும் வைரலாக்கி வருகின்றனர். அதோடு #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் 2ஆம் இடத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X