டெல்லி விமான நிலையத்தில் விஜய்.. பீஸ்ட் மோடில் புகைப்படங்களை வைரலாக்கும் தளபதி ரசிகர்கள்!

சென்னை: பீஸ்ட் படத்தின் அடுத்த ஷெட்யூல் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட்.

வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் விஜய்

விமான நிலையத்தில் விஜய்

பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பறந்து சென்றார். இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் நடிகர் விஜய் வெளியேறும் போது ரசிகர்கள் க்ளிக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்த படி டெல்லி விமான நிலையத்தில் நடந்து செல்லும் நடிகர் விஜய்யின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தளபதி ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகின்றன.

தலைவன் தரிசனம்

தலைவன் தரிசனம்

தளபதி ரசிகர்களுக்கு காலையிலேயே தலைவன் தரிசனம் கிடைத்து விட்டது என ஏகப்பட்ட ரசிகர்களும் ரசிகைகளும் டெல்லி விமானத்தில் நடிகர் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் டெல்லி விரைந்துள்ளார்.

ஜார்ஜியாவில்

ஜார்ஜியாவில்

Fast and Furious 9ம் பாகம் படமாக்கப்பட்ட ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்புகளை விஜய்யின் பீஸ்ட் குழு முடித்து விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தி முடித்த நிலையில், அடுத்த கட்டமாக டெல்லியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நவம்பரில் நிறைவடையும்

நவம்பரில் நிறைவடையும்

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் முழுமையாக நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் நெல்சன் அதற்கான வேலைகளில் தீயாக இறங்கி உள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுகு பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்து உள்ளன.

Recommended Video

MS Dhoni's special meeting with Thalapathy Vijay | Beast Shooting spot
பொன்னியின் செல்வனுடன் போட்டி

பொன்னியின் செல்வனுடன் போட்டி

2022ம் ஆண்டு சம்மருக்கு விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேஜிஎஃப் சாப்டர் 2, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் அந்த நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தியேட்டர்களில் மிகப்பெரிய கிளாஷ் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் ரிலீஸ்

டாக்டர் ரிலீஸ்

இயக்குநர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் வெறித்தனமாக இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தல தளபதி சந்திப்பு

தல தளபதி சந்திப்பு

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், தல அஜித் உடன் விஜய் டெல்லியில் சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் தல தளபதி சந்திப்பு புகைப்படங்கள் வெளியானால் இணையமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாட தொடங்கி விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X