“பீஸ்ட்“ வேறமாறி இருக்கும்… அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் நெல்சன் !

சென்னை : இயக்குனர் நெல்சன் பீஸ்ட் திரைப்படம் குறித்த சூப்பரான அட்டேட்டை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீஸ்ட்

பீஸ்ட்

நடிகர் விஜய்யின் 65-வது படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இளம் இயக்குனர்களுடன்

இளம் இயக்குனர்களுடன்

இந்த படத்தினை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே எதிரிபார்ப்பு அதிகமாகி உள்ளது. முன்னணி இயக்குனர்களை விட்டு விலகி தற்போது இளம் இயக்குனர்களுடன் தொடர்ந்து படம் நடித்து வருகிறார் விஜய்.

டாக்டர் வசூல்சாதனை

டாக்டர் வசூல்சாதனை

நெல்சன் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. டார்க் காமெடியை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதனால் தற்போது அனைவரது பார்வையும் நெல்சனின் அடுத்த படமான பீஸ்ட் மேல் திரும்பி உள்ளது.

பீஸ்ட் வேறமாறி இருக்கும்

பீஸ்ட் வேறமாறி இருக்கும்

படத்தின் தலைப்பு, நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தவிர மற்ற தகவல்கள் எதுவும் வெளிவராமல் படக்குழு பார்த்து வருகிறது . இந்நிலையில், இயக்குனர் நெல்சன் அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் திரைப்படம் கோலமாவு கோகிலா மாதிரியும் இருக்காது, டாக்டர் மாதிரியும் இருக்காது... பீஸ்ட் வேறமாறி இருக்கும் பார்த்துட்டு சொல்லுங்க என்று பீஸ்ட் திரைப்படம் குறித்து ஒரு சூப்பட் அப்பேட்டை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X