பாவம், ஒரு கதை சொல்ல கஷ்டப்பட்ட விஜய் சேதுபதி: வீடியோ இதோ
Recommended Video

சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லருக்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசிய வீடியோ
சென்னை: சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லருக்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.

ட்ரெய்லரில் விஜய் சேதுபதி கதை சொன்னதுடன் திருநங்கை ஷில்பாவாக வந்து அசத்தியுள்ளார். அந்த ட்ரெய்லர் வீடியோ 24 மணிநேரத்தில் 50 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
நீளமான வசனத்தை விஜய் சேதுபதி பேசிய விதம் ரசிகர்களுக்கு பிடித்தது. இந்நிலையில் ட்ரெய்லருக்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி ஒரே டேக்கில் அந்த வசனத்தை பேசிவிடவில்லை. பல டேக்குகள் வாங்கி கஷ்டப்பட்டு பேசியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications