விருதும் கையுமாக விஷால்… அவர் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன ?

சென்னை : நடிகர் விஷால் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர். அவர் கடைசியாக கதாநாயகனாக நடித்த வீரமே வாகை சூடும் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத போதும் விஷால் சந்தோஷம் கொள்ளும் நிகழ்வாக அவர் போட்டியிட்ட நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார்.

விஷால் ரசிகர்கள் என்று ஒரு தனிப்பட்ட கூட்டம் அவருக்காக இயங்கி கொண்டு தான் இருக்கிறது. விஷால் எடுக்கும் முடிவுகள், அவரது அப்பா கொடுக்கும் அட்வைஸ் என்று ஒரு தனி டிராக் பிடித்து போயி கொண்டு இருக்கிறார் .

இந்நிலையில் அவரது சந்தோஷம் மேலும் அதிகரிப்பது போல ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதனால் விஷால் சந்தோஷ மிகுதியில் உள்ளார்.

பாதை மாறிய விஷால்

பாதை மாறிய விஷால்

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஷால் தொடர்ந்து பல ஹிட் படங்களை தந்தவர். விஜய் அஜித்துக்கு போட்டி என பலரால் பேசப்பட்டவர். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. கதைகள் தேர்ந்தெடுப்பதில் இயக்குனரை தேர்வு செய்வதில் அவரது கவனம் சிதறியது போல அவர் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தன.

சர்ச்சை நாயகனான விஷால்

சர்ச்சை நாயகனான விஷால்

நடிகர் விஷால் தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சரியாக வருவதில்லை அதனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் எனும் புகார் பரவலாக பேசப்பட்டது. அதனால் பல தயாரிப்பாளர்கள் அவரை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பதற்கு தயங்கினர். அதோடு, விஷால் ஹைதராபாத் பெண்ணான அனீஸ் அல்லா வை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது விஷாலை மேலும் சர்ச்சையில் சிக்க வைத்தது. இப்படியாக அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார்.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் விஷால் நடித்து கடைசியாக வெற்றி பெற்ற தமிழ் படம். டிடெக்டிவ் ஆக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அதன்பிறகு அவர் நடித்த ஆக்சன், சக்கரா, எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் அவருக்கு ஏமாற்றத்தை தந்தன. தற்போது விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி வருகிறார்.

Youth Icon

Youth Icon

சமீபத்தில் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விஷால் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். தொடர்ந்து பல சோதனைகளுக்குப் பிறகு ஒரு வெற்றியாக அவருக்கு அமைந்தது. இது விஷால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயிப்பது ஆகும். இதோடு கூடுதல் மகிழ்ச்சியாக " start up india " magazine தரப்பில் விஷாலுக்கு சிறந்த தயாரிப்பாளர் மற்றும் Youth Icon விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X