»   »  இயக்குநர்களை இம்சிக்கும் பரத்!

இயக்குநர்களை இம்சிக்கும் பரத்!

Subscribe to Oneindia Tamil

காதல், எம் மகன், வெயில் என மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து விட்டதால் பரத் இப்போது தான் நடித்து வரும் படங்களில் மூக்கை நுழைத்துஇயக்குநர்களை இம்சைப்படுத்த ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.

பாய்ஸ் படத்தின் நாயகர்களில் ஒருவராக தம்மாத்தூண்டு பையனாக நடித்து அறிமுகமானவர் பரத். அந்தப் படத்தால் அவருக்கு பிரேக்கிடைக்கவில்லை. ஆனால் காதல், கோடம்பாக்கத்தில் பரத்துக்கு நிரந்தர முகவரியைக் கொடுத்தது.

தொடர்ந்து நடித்த எம் மகன், வெயில் ஆகிய படங்களும் வெற்றி பெற்றதால் பரத் பிசியான நடிகராகி விட்டார். காதல் படம் மதுரையையும், எம்மகன் காரைக்குடியையும், வெயில் விருதுநகரையும் மையமாக வைத்து வந்த படங்கள்.

இதனால் சென்டிமென்ட்டாக மதுரை அல்லது மதுரைப் பக்கம் உள்ள பகுதிகளை பின்னணியாக கொண்ட கதை என்றால் உடனே ஒத்துக்கொள்கிறாரார் பரத்.

அத்தோடு நில்லாமல் தான் நடித்து வரும் படங்களிலும் மதுரையை கொஞ்சம் போலாவது காட்டியே ஆக வேண்டும் என இயக்குநர்களைவற்புறுத்தவும் ஆரம்பித்துள்ளாராம்.

மதுரை இல்லாவிட்டாலும் பரவாயில்லை சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி என கொஞ்சம் தூரமாக போனாலும் பரவாயில்லை என்றும்அடம் பிடிக்கிறார் என்கிறார்கள்.

சென்னையில் சமீபத்தில் ஹோட்டல் ராதா பார்க் இன்னில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் பரத்தின் செய்தித் தொடர்பாளர் இதைஉறுதிப்படுத்தினார்.

பரத்-சந்தியா- பாவனா நடித்துள்ள கூடல் நகர் ஆடியோ கேசட் ரிலீஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இது. விசேஷம் என்னவென்றால்குடிகாரர்களுக்கான சந்திப்பு பிளஸ் பார்ட்டி இது என்று அந்த பி.ஆர்.ஓ. குறிப்பாக சொல்லித்தான் பத்திரிக்கையாளர்களை அழைத்தார்.

கண்டிப்பாக குடிகார பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு இது. அப்படிப்பட்ட பழக்கம் இல்லாதவர்கள் தயவு செய்து வருவதைத் தவிர்க்கவும்என்று அன்பாக அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும், தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லாத பத்திரிக்கையாளர்களும் (நாம் உள்பட)வந்திருந்தனர்.

காக்டெயில் குளியல் ஆரம்பிப்பதற்கு முன்பு பரத் பேச விரும்புவதாக சொல்லப்பட்டது (ஆமா, குளிக்க ஆரம்பிச்ச பிறகு கேட்கும் நிலையில்யாரும் இருக்க மாட்டார்களே!)

செய்தியாளர்களிடம் பரத் பேசுகையில், மதுரையை அடிப்படையாகக் கொண்ட கதைகள்தான் எனக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. அது காதலாகஇருக்கட்டும், எம் மகனாக இருக்கட்டும், இல்லை வெயிலாக இருக்கட்டும்.

மதுரை அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாக வைத்து வந்த படங்கள் இவை. எனவேதான் மதுரை அடிப்படையாகக் கொண்டுகதைக்களத்தை அமைக்குமாறு நான் இயக்குநர்களை வற்புறுத்துகிறேன். இதில் தவறு ஏதும் இல்லை என்றார்.

வெயில் படத்தில் 2வது ஹீரோவாக நடித்திருக்கிறீர்களே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அண்ணே, இப்படிக் கேட்டு ஈகோ பிரச்சினையைஏற்படுத்தி விடாதீங்க. ஏற்கனவே சொல்லியிருக்கேன். அந்தப் படத்தை, ஷங்கர் சாருக்காகத்தான் செய்தேன்.

அதேசமயம், படத்தில் எனது கேரக்டரை நான் நல்லாத்தான் செய்திருந்தேன். அதில் எனக்கு பூரண திருப்திதான். ஒரு வருத்தமும் இல்லை.என்னோட கேரக்டர் உங்களுக்கு குறைச்சலா தெரியுதா.?

அப்படத்தில் ரசிகர்களின் வரவேற்பையும், பாராட்டையும் பசுபதி பெற்றிருக்கலாம். ஆனால் படத்தின் ஹீரோ நான்தான். அதை விடுங்க, படம்நல்லா ஓடியதுதான் முக்கியம். போட்ட தியேட்டர்கள் அத்தனையிலும் 50 நாட்களைத் தாண்டி கலக்கி விட்டது. வெற்றி பெற்ற ஒரு படத்தில் நானும்இருந்தேன், அவ்வளவுதான், அது போதும்ணே என்றார் எதார்த்தமாக.

காதல்? என்று ஒரு நிருபர் இழுத்தபோது, கண்டிப்பாக என்னோடது காதல் கல்யாணம்தான். ஆனால் காதல் என்பது கடவுள் கொடுக்கும் பரிசு. அதுஇயற்கையாக வர வேண்டும். மீடியாவில் எழுத ஆரம்பித்து விட்டார்களே என்று யார் மீதும் நாம் காதல் கொள்ள முடியாது. அது அதுவாக வரவேண்டும் என்றார் பரத்.

அதுக்காக ஒரே நடிகையுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருப்பதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil