சன்னிலியோன் ஒரு குழந்தை மாதிரி: சர்டிபிகேட் தரும் பரத்
சென்னை: உலகின் டாப் 20 போர்னோ நடிகைகளில் 12ம் இடத்தில் இருப்பவர் சன்னிலியோன். ஆனால், சமீபகாலமாக இந்தி படங்களில் சமத்துப்பிள்ளையாக (?) நடித்து வருகிறார் சன்னி.
அந்த ஜில்ஜில் நாயகியுடன், நம்மூர் பாய்ஸ் பரத் ஹிந்தி படமான ஜாக்பாட்டில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த செய்தி தான். நஸ்ருதீன் ஷா, சச்சின் ஜோஷி, சன்னி லியோன் மற்றும் பரத் என நாலு பேரை சுற்றி மட்டுமே பின்னப் பட்ட கதையாம் அது.
காதல், கல்யாண்ம் என சமீபத்திய வதந்திகளிலிருந்து சற்று ரிலாக்ஸாகிய பரத், சன்னி லியோனுடன் நடித்து வரும் அனுபவம் பற்றி இப்படி மனம் திறந்துள்ளார்....

பயந்தாங்கொள்ளி சன்னி...
சன்னி லியோன் ரொம்பவே ஜாலியான பொண்ணு. ஆனா தைரியம் தான் கொஞ்சம் கம்மி. சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட ரொம்பவே பயப்படுவாங்க.

கடல் ஷூட்டிங்...
படத்துல ஒரு காட்சிக்காக, கடல்ல கப்பல்ல வச்சு ஷூட்டிங். அது வரைக்கும் ஜாலியா இருந்தவங்க அன்னைக்கு முழுக்க சைலண்டா இருந்தாங்க.

கப்பல் ஆடுற போபியா...
ஏன் இப்படி அமைதியா இருக்கீங்கனு கிட்ட போய் விசாரிச்சா, ‘கடல்ல கப்பல் ஆடிட்டே இருக்கிறது பயமா இருக்குனு சொல்றாங்க...

அய்யோ... ஒரே காரம்..
இன்னொரு நாள், சாப்பாடு தட்டுல பச்சை மிளகாயைப் பார்த்ததுமே அலறி சாப்பிட மாட்டேனு சொல்லிட்டாங்க. அது ஏன்னு கேட்டா, ஒருநாள் சாப்பிடும் போது தெரியாம பச்சை மிளகாயைக் கடிச்சு காரம் தாங்கலையாம்.

ஒரு குழந்தை மாதிரி...
எல்லாரும் அவங்களை கிளாமர் சிம்பலா தான் பாக்குறாங்க, ஆனா, நிஜத்துல சன்னி லியோன் ஒரு குழந்தை மாதிரி எனத் தெரிவித்துள்ளார் பரத்.


Click it and Unblock the Notifications











