‘555’ க்காக மொட்டை பாஸ் ஆன பரத்

சென்னை: '555' படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டுக் கொண்டுள்ளார். ஒரு வருடமாக அவர் வளர்த்து வந்த தாடி, மீசை, மற்றும் நீண்ட தலைமுடிக்கு தற்போது அவர், 'குட் பை' சொல்லியுள்ளார்.

சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், டிசிம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சசி, '555' என்ற பெயரில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடிகளாக சாந்தினி, எரிகா பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். செந்தில் தயாரிக்கிறார்.

மொட்டை போட்டாச்சு...

மொட்டை போட்டாச்சு...

இந்த படத்துக்காக பரத் கடந்த ஒரு வருடமாக தாடி, மீசை, மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்த பரத், இப்போ தாடி-மீசையை சவரம் செய்ததுடன், தலைமுடியையும் மொட்டை அடிச்சுட்டாரு.

கதைக்காக முடி கொடுத்தேன்...

கதைக்காக முடி கொடுத்தேன்...

பரத் இதுபற்றி கூறும்பொழுது, ‘‘555, ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். கதைப்படி, நான் சாப்ட்வேர் என்ஜினீயர். வேலை விஷயமாக கனடா செல்ல வேண்டிய நிலையில், நான் ஒரு விபத்தில் சிக்குகிறேன். அந்த விபத்தினால் என் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறிப்போகிறது. அதில் இருந்து வெளிவருவதற்கு நடத்தும் போராட்டம்தான் கதை.

மூன்று முகம்...

மூன்று முகம்...

இந்த படத்தில் நான், ‘சாக்லட் பாய்' போன்ற இயல்பான ஒரு தோற்றம், நீண்ட தாடி-மீசை-தலைமுடியுடன் இன்னொரு தோற்றம், மொட்டையடித்த உருவத்துடன் ஒரு தோற்றம் என மூன்று விதமான தோற்றங்களில் வருகிறேன்.

கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு நடித்தேன்...

கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு நடித்தேன்...

இதற்காக, கடந்த ஒரு வருடமாக தாடி-மீசை மற்றும் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தேன். கன்னம் ஒட்டிப்போய், வாழ்க்கையை பறிகொடுத்த தோற்றம் வரவேண்டும் என்பதற்காக, பட்டினி கிடந்தேன்.

சிக்ஸ்பேக் பரத்...

சிக்ஸ்பேக் பரத்...

கடந்த ஒரு வருடமாக சாப்பாடு கிடையாது. முட்டை, கோழி ஆகிய இரண்டை மட்டும் சாப்பிட்டு வந்தேன். 6 மணி நேரம் ‘ஜிம்'மில் கிடந்தேன்.

நோயாளி பரத்...

நோயாளி பரத்...

அடுத்து, மொட்டையுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக தாடி-மீசையை எடுத்து, தலைமுடியை மொட்டை போட்டுக்கொண்டேன். ஒரு நோயாளி போன்ற தோற்றம் வேண்டும் என்பதற்காக, மொட்டை போடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, தண்ணீர் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன்.

படம் முடிஞ்சு தான் சோறு...

படம் முடிஞ்சு தான் சோறு...

75 கிலோ எடையில் இருந்து 64 கிலோவாக உடல் எடையை குறைத்துக்கொண்டேன். மொட்டையுடன் கூடிய காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடித்த பிறகுதான் சாப்பிட்டு, தண்ணீர் குடித்தேன்'' , இவ்வாறு பரத் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X