Bharath: சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் ட்ரை பண்ணாதீங்க.. அதெல்லாம் உடம்புக்கு கேடு.. பரத் கொடுத்த பெரிய அட்வைஸ்
சென்னை: சமீப காலமாகவே இளைஞர்கள் தொடங்கி பல ஜும் டிரைனர்கள், பாடி பில்டர்கள் என பலரும் திடீரென உயிரிழந்து வருகிறார்கள். இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், அதற்கான பொதுவான மருத்துவக் காரணங்கள் இன்னும் முறையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், பலரும் கடுமையான உடற்பயிற்சி காரணமாகவே இறக்கிறார்கள், அல்லது ஸ்டீராய்டு போன்ற வேதிப்பொருளை உட்கொள்வதால் இறக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தங்களது உடலை சிக்ஸ் பேக்ஸ் உள்ள உடலாக மாற்ற வேண்டும் என்று பல இளைஞர்கள் முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் சினிமா பிரபலங்களை பார்த்து இது போல முயற்சித்து வருகிறார்கள்.
ஆனால் நடிகர் பரத் இது தொடர்பாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள அறிவுரையானது பலரது கவனத்தை ஈர்த்ததுடன் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் பரத் கூறுகையில், " நான் பல பேட்டிகளிலும் கூறி உள்ளேன். சிக்ஸ் பேக்ஸ் என்பது அவுட்டர் ஃபேண்டசி. இதையெல்லாம் யாரும் முயற்சிக்காதீர்கள், அது உடலுக்கு நல்லது கிடையாது. அதனால் உடலின் உள் உறுப்புகள் பெருமளவு பாதிக்கப்படும்.
அதற்குப் பின்னால் பல தியாகங்களும் வாழ்வியல் முறை மாற்றமும் உள்ளது. வெளியே, புகைப்படங்களில் பார்ப்பதற்கு இவை எல்லாம் நன்றாக உள்ளது போல தோன்றலாம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பானது கற்பனைக்கு எட்டாதது. ஒருவேளை இப்போது உள்ள இளைஞர்களுக்கு சிக்ஸ் பேக்ஸ் டிரை பண்ண வேண்டும் என்றால், ஒருமுறை சிக்ஸ் பேக் வைத்துவிட்டு, விட்டுவிடுங்கள். ஆனால் அதையே மெயிண்டைன் செய்துவிட்டு இருப்பது உடலுக்கு நல்லது கிடையாது.

இதுதான் உடல்நிலை: 555 படம் பண்ணும் போது நான் வெறும் மேரி பிஸ்கட், சிக்கன், காய்ந்த திராட்சை மற்றும் முட்டை என இந்த நான்கு மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டேன். ஒன்றரை ஆண்டுகள் இந்த நான்கு பொருட்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டேன். 555 படத்தில் இருந்தது போன்ற உடல் அமைப்பை கொண்டு வர அப்படி சாப்பிட்டேன். எனது உடலின் கொழுப்பு 11 சதவீதம் தான்" என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவை விமர்சிக்கும் ரசிகர்கள்: பரத்தின் இந்த பேச்சு குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் பலரும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்த கதாநாயகன் சூர்யா கூட இது தொடர்பாக இளைஞர்களிடம் இது ஆபத்தானது என்று கூறவில்லை. அதேபோல், அவரது தந்தை சிவக்குமாரும் சூர்யா சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளது தொடர்பாக பெருமையாக பேசி வருகிறார், ஆனால் அது உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று ஒரு இடத்திலும் கூறவில்லையே என்று விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











