டாக்டர் ஜெஸ்லியைக் கைப்பிடிக்கிறார் பரத்... செப். 14ல் வரவேற்பு
சென்னை: நடிகர் பரத்துக்கு திருமணம் உறுதியாகியுள்ளது. துபாயைச் சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லியை கரம் பிடிக்கிறார் பரத்.
பதிவுத் திருமணம் செய்யவுள்ளார் பரத். இவர்களது திருமண வரவேற்பு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது.
பரத் - ஜெஸ்லி திருமணம் ஒரு காதல் திருமணமாகும். நண்பர்களாக பழகி பின்னர் திருமண வாழ்வில் சங்கமிக்க முடிவு செய்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

பாய்ஸ் பரத்
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத்.

23 படங்களில் நாயகன்
பரத் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 555 படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார்.

துபாய் பல் டாக்டர்
பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா - ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லியும் நண்பர்களாக அறிமுகமாகி திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

பதிவுத் திருமணம்
இதுகுறித்து பரத் கூறுகையில்,நண்பர்களாக பழகினோம். சில நாட்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருவரும் பேசி முடிவெடுத்தோம். எனது பெற்றோர் ஸ்ரீனிவாசன் - பாக்யலஷ்மி மற்றும் ஜெஸ்லியின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் பதிவு திருமணம் செய்யவுள்ளோம்.

செப்டம்பர் 14ல் வரவேற்பு
செப்டம்பர் 14ம் தேதியன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,இசையமைப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடக நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஷங்கரின் வாழ்த்து
திருமணம் முடிவான உடனே என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஷங்கர் அவர்களை சந்தித்து திருமணம் பற்றி கூறினேன். அவரும் அவரது மனைவியும் மனதார வாழ்த்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இருகுடும்பத்தை சேர்ந்தவர்களும் மற்றும் எனது மேனேஜர் பழனிகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள் என்று கூறினார் பரத்.


Click it and Unblock the Notifications











