»   »  பரத்தின் பொழுது போக்கு

பரத்தின் பொழுது போக்கு

Subscribe to Oneindia Tamil

பரத்துக்கு பிடித்தமான பொழுது போக்கு என்ன தெரியுமா? சைட் அடிப்பது தானாம்.

சின்னப்பையன் பரத்தின் அலும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கோலிவுட்காரர்கள் புலம்புகிறார்கள். இன்னும் ஸ்கூல் பையனாக இருக்கும் பரத்தின்தேவையில்லாத சில விளையாட்டுக்களால் அடிக்கடி சிலரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.

எனக்கு அந்த நடிகையுடன் காதல், இந்த நடிகையுடன் காதல் என்று திடீர் திடீரென இவர் விடும் புருடாக்கள் சிலருக்கு கடும் எரிச்சலை கிளப்பி வருகிறது.

இப்படித் தான் கோபிகாவும் நானும் உயிருக்குயிராக காதலித்து வருகிறோம். ஒரு நாள் கூட என்னிடம் அவரால் போனில் பேசாமல் இருக்க முடியாது என்று அள்ளிவிட்டுள்ளார்.

இது அப்படியே கோபிகாவின் காதுக்கும் போய் விட்டது. அவ்வளவு தான் கொதித்து விட்டார். உடனே பரத்தை போனில் பிடித்து உலுக்கி எடுத்து விட்டாராம்.

இது பழைய கதை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் பரத் திருந்துவதாக இல்லையாம். ஆனால் கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா? நான் இதுவரை யாருடைய காதல்வலையிலும் சிக்கியதே கிடையாது. (வலையுடன் நிறைய பேர் அலைகிறார்களோ என்னவோ..)

யாரையாவது காதலிக்கும் ஆசையோ, எண்ணமோ எனக்கு எப்போதுமே இருந்தது கிடையாது. கல்லூரியில் படிக்கும் போதும், நண்பர்களுடன் ஜாலியாக சுற்றும்போதும் ஜாலியாக நிறைய கேர்ள்ஸை சைட் அடித்திருக்கிறேன்.

ஆனால் காதலிக்கணும் என்று யோசிக்க வைக்கும் வகையில் இதுவரை எந்தப் பொண்ணும் எனக்கு கிடைக்கவில்லை (அய்யோ பாவம்) என்கிறார்.

சரி..பெரிய சினிமா ஸ்டாராகி விட்டீர்கள். இப்போது எப்படி, அதே சைட் அடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்றோம்.

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? என்று நம்மிடம் எகிறிய பரத், காலேஜில் படிக்கும் போது தான் சைட் அடிக்கணுமுன்னு யாராவது சட்டம் போட்டிருக்கிறார்களாஎன்ன? சைட் அடிப்பதற்கு நேரம், காலம், வயசெல்லாம் கிடையாது.


சினிமாவில் ஸ்டாரானால் சைட் அடிக்கக் கூடாதா? எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கே அது தான். பிறகு எப்படி அதை விடமுடியும்? ஷூட்டிங் இல்லாதசமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து விட்டால் அப்புறமென்ன..சைட் அடிப்பது மட்டும் தான் வேலை என்கிறார்.

சைட் அடிப்பது மட்டுமே பொழுதுபோக்காகி விட்டால் அப்புறம் சைட் ரோலை கொடுத்து ஒதுக்கி விடப்போகிறார்கள் ஜாக்கிரதை..!


Read more about: baraths new entertainment

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil