பாரதிராஜா ஒரு பெரிய ஃபிராடு, ஆதாரம் இருக்கு: பார்த்திபன் பகீர்

By Siva

Recommended Video

பாரதிராஜா ஒரு பெரிய ஃபிராடு : : பார்த்திபன் பகீர்- வீடியோ

சென்னை: இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு பெரிய ஃபிராடு என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நிர்மல் குமார் இயக்கத்தில் பாரதிராஜா நடித்துள்ள படம் ஓம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பாரதிராஜாவை ஃபிராடு என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் கூறியதாவது,

பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜாவுக்கு இணையான இயக்குனர்கள் இல்லை என்பது போன்று அனைவரும் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவர் எவ்வளவு பெரிய ஃபிராடு, எவ்வளவு பெரிய ஊழல் செய்திருக்கிறார் என்று நான் பேசப் போகிறேன். அவர் எந்த வருடத்தில் பிறந்தார் என்பதற்கான பிறப்பு சான்திதழ் என் கையில் உள்ளது. நான் போய் நைசா வாங்கிட்டி வந்திருக்கிறேன்.

போலி

போலி

பாரதிராஜா அந்த துறையில் நைசா ஒரு ஸ்டே ஆர்டர் கொடுத்திருக்கிறார். அதாவது 50 வயதிற்கு மேல் அவர் வயசு ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிர்மலா தேவி மாதிரி ஒருவரை செட்டப் பண்ணி, உள்ள ஏதோ கிளார்க்கை கரெக்ட் பண்ணி, அவர்களுடைய வேலை என்னவென்றால் ஒவ்வொரு வருஷமும் ஆண்டை மாற்ற வேண்டும். இந்த ஆண்டு 23.8. 1968 அது தான் அவருடைய பிறந்தநாள் என்று போட்டிருக்கு. போன வருஷம் 23.8.1967 என்று இருந்தது. அடுத்த வருஷம் 69 என்று மாறிவிடும். இதற்காக அங்கு ஒரு கிளார்க்கை போட்டு 50 வயது மாறாதபடி மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்கிறார். இது அவ்வளவு பெரிய ஊழல்.

ஓம்

ஓம்

இந்த படத்தின் தலைப்பு ஓம். ஓம் என்றால் ஓல்டுமேன் என்று தலைப்பு. பெரிய மனிதர்களுக்கு ஓம் என்றால் பிரணவ மந்திரம். சாதாரண அல்லது சாதாரணத்திற்கு கீழ் உள்ள நம்மை போன்றவர்களுக்கு ஓம் என்றால் என்ன தோன்றும். எனக்கு ஞானம் பெற என்ன செய்வது என்று ஒரு சிஷ்யன் குருவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு குரு காதில் ஒரு மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லும்போதும் ஒரு பேரீச்சம்பழத்தை சாப்பிடு என்று கூறியுள்ளார். எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும் குருவே என்று சிஷ்யம் கேட்டிருக்கிறான். அதற்கு அந்த குருவோ, நீ உருப்படவே மாட்ட. எத்தனை தடவை மந்திரம் சொல்லணும் என்று கேட்டிருந்தால் நீ உருப்பட்டிருப்பாய். நாம் எல்லாம் அந்த மாதிரி கேரக்டர்.

கோக்

கோக்

நமக்கு எல்லாம் ஓம் என்றால் என்ன தோன்றும் என்றால் ஓல்டு மாங்க். ஒரு பெண்மணி என்னிடம் வந்து, ஓல்டு மாங்க் பாட்டிலின் வடிவத்தை மாற்றிவிட்டார்கள். முன்பிருந்த வடிவத்தை பார்த்தாலே கிக் வரும். ஓல்டு மாங்கிற்கு கோக் தான் சரியான காம்பினேஷன் என்று கூறினார். இந்த படத்தில் பாராதிராஜா அவர்கள் ஓல்டு மாங்க், கோக்காக ஒரு சின்னப் பெண் நடிக்கிறார்கள். அவரின் பெயர் எனக்கு தெரியவில்லை. வயசு சுமாராக 18, 19 தான் இருக்கும் போல இருக்கு. 18 அவருக்கு நல்லா ஒர்க்அவுட் ஆகிறது.

16 வயதினிலே

16 வயதினிலே

16 வயதினிலேவில் இருந்து ஆரம்பித்து இந்த 18 நல்லா ஒர்க்அவுட் ஆகிக் கொண்டிருக்கு. இந்த விழாவே முதலில் 9ம் தேதி நடப்பதாக இருந்தது. 9ம் தேதிக்கு இருந்த விழா 18ம் தேதிக்கு மாறியுள்ளது. அப்படி என்றால் 18 நல்லா ஒர்க்அவுட் ஆகிறது என்று அர்த்தம். மலை மலை சார்ந்த பகுதி குறிஞ்சி என்று நமக்கு தெரியும். அதே போன்று காதலும் காதல் சார்ந்த பகுதி என்றால் அது பாரதிராஜா அவர்கள் தான். பாரதிராஜாவையும் காதலையும் பிரிக்கவே முடியாது.

கேரளா

கேரளா

என்னுடைய கதை, திரைக்கதை, வசனம் என்கிற புத்தகத்தை அவர் கையால் வெளியிட வேண்டும் என்று காத்திருக்கிறேன். அந்த புத்தகத்தின் வருமானத்தை எல்லாம் பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் மூலமாக கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்க்க ஆசைப்படுகிறேன் என்றார் பார்த்திபன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X