கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்.. அதிருப்தியை வெளிப்படுத்திய அரவிந்த்சாமி!

By Vignesh Selvaraj

சென்னை : அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகவிருந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் மீண்டும் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்துள்ளார்.

டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிரான திரையுலகினரின் ஸ்ட்ரைக்குக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு மூன்று படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று (மே 11) விஷாலின் 'இரும்புத்திரை', கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் 'நடிகையர் திலகம்', அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', அரவிந்த்சாமி நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

ரிலீஸ் தள்ளிவைப்பு

ரிலீஸ் தள்ளிவைப்பு

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று, பத்திரிகையாளர்களுக்கான ப்ரிவியூ ஷோவும் திரையிடப்பட்டது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது தயாரிப்பு நிர்வாகம்.

அரவிந்த்சாமி அதிருப்தி

அரவிந்த்சாமி அதிருப்தி

ஏற்கெனவே பல முறை தள்ளிவைக்கப்பட்டு இந்த முறையும் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் ஹீரோ அரவிந்த்சாமியும் அதிருப்தி அடைந்து மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

அரவிந்த்சாமி வருத்தம்

இது தொடர்பாக அரவிந்த்சாமி ட்வீட் செய்துள்ளார். "அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் ஏன் தள்ளிப்போனது என உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. மீண்டும் இந்தப் படம் தள்ளிப்போகும் எதிர்பார்க்கவில்லை. ரிலீஸ் தள்ளிப்போனது வருத்தமளிக்கிறது.

இனி போஸ்ட் செய்யமாட்டேன்

இனி போஸ்ட் செய்யமாட்டேன்

எப்போதும் பட தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன். ரிலீஸுக்காக காத்திருந்தவர்களை தவறாக வழிநடத்திவிட்டேனோ என நினைக்கிறேன். இனிமேல் ரிலீஸ் தேதியை நான் பதிவிட மாட்டேன். இன்று வெளியாகும் மற்ற படங்களை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த வாரம்?

அடுத்த வாரம்?

கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணத்தை தயாரிப்பு நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. குறைவான தியேட்டர்கள் ஒப்பந்தமானதால் தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X