நாய் குட்டியுடன் நச்சுன்னு இருக்கும் யாஷிகா ஆனந்த்.. எனக்கு கொடுத்து வைக்கலயே.. புலம்பும் ஃபேன்ஸ்!

சென்னை: சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் விதவிதமாக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், இணையத்தில் அதீத கவர்ச்சி காட்சி வருகிறார். ஆனால், அம்மணிக்கு தான் படவாய்ப்பு எதுவும் வந்தபாடு இல்லை. இதனால், பட வாய்ப்பை பெற படாத பாடுபட்டு வருகிறார்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த் பூர்வீகம் டெல்லி தான், யாஷிகா பிறந்ததும் அங்கே தான். பின் அவரது குடும்பம் மாறுதலாகி சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டதால், யாஷிகா சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட இவர் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகாவிற்கு பின், ராஹ்மான் நடித்த துருவங்கள் பதினாரு படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. க்ரைம் த்ரில்லர் திரைப்படமான அந்த படத்தில் யாஷிகாவை வைத்தே கதை நகர்ந்தாலும், அவருக்கு அவ்வளவாக பெயர் கிடைக்கவில்லை.

yashika Anand instagram

நடிகை யாஷிகா ஆனந்த்: இதைத்தொடர்ந்து, யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரட்டை அர்த்த வசனம் கொண்ட அந்த படம் நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தினை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் லீட் ரோலில் நடித்தார்.தொடர்ந்து பட வாய்ப்பு வந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த கதாபாத்திரமும் வராததால், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு, தொடை அழகை காட்டி கவர்ச்சி உடையில் வலம் வந்து , டீன் ஏஜ் பாய்ஸின் பேவரைட்டாக மாறினார். யாஷிகாவின் ரசிகர்கள் ஓட்டு போட்டு காப்பாற்றி 98 நாட்கள் வீட்டில் இருக்க வைத்தனர். ஆனால், டைட்டிலை பெற முடியாது என தெரிந்து கொண்ட யாஷிகா, 5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

yashika Anand instagram

கார் விபத்து: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சில படத்தில் நடித்து வந்த யாஷிகா, 2021ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து படுத்த படுக்கையாக இருந்தார். பின் அதிலிருந்து மீண்டு குணமடைந்து திரும்பவும் நடிக்க ஆரம்பித்தார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

yashika Anand instagram

நாய் குட்டியுடன் யாஷிகா ஆனந்த்: இன்ஸ்டாகிராமில் நான்கு புள்ளி ஒரு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் யாஷிகா, சோஷியல் மீடியாவில் மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடவைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தற்போது தனது செல்ல நாய் குட்டியை கொஞ்சியபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வெச்சநாய் என்றும், எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவு தான் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

FAQs
மாடல் அழகி நடிகை யாஷிகா ஆனந்த் நடித்த முதல் திரைப்படம் எது?

நடிகை யாஷிகா ஆனந்த் நடித்த முதல் திரைப்படம் இனிமே இப்படித்தான்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X