ப்பா.. பிக்பாஸ் தர்ஷனா இது.. 4 வாரத்துல இப்படி ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷனா... மிரள விடும் போட்டோ!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் 4 வாரத்தில் ஏற்பட்ட ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கை தமிழரான தர்ஷன், மாடலாக வலம் வருகிறார்.

ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனதில் பட்டதை பேசி நேர்மையாக விளையாடினார்.

தைரியமாக பேசிய தர்ஷன்

தைரியமாக பேசிய தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் எப்போதும் சண்டை போட்டு வந்த வனிதாவை வச்சு செய்தார் தர்ஷன். சீனியர்களே வனிதாவின் வாய்க்கு பயந்து ஓட தர்ஷன் தைரியமாக அவரின் தவறுகளை சுட்டிக்காட்டினார். இதனாலேயே ரசிகர்களின் ஆதரவை பெற்றார் தர்ஷன்.

ராஜ் கமல் பிலிம்ஸில் வாய்ப்பு

ராஜ் கமல் பிலிம்ஸில் வாய்ப்பு

தர்ஷன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க தர்ஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

சனம் ஷெட்டியுடன் காதல்

சனம் ஷெட்டியுடன் காதல்

அதன்பிறகு தான் ஒரு பெரிய புராஜெக்ட்டில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக அறிவித்தார் தர்ஷன். ஆனால் இதுவரை தர்ஷன் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரபல மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்தார் தர்ஷன்.

தர்ஷன் ஏமாற்றிவிட்டார்

தர்ஷன் ஏமாற்றிவிட்டார்

இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை பிரிந்தார் தர்ஷன். இதனால் நொந்துபோன சனம் ஷெட்டி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தர்ஷன் ஏமாற்றிவிட்டார் என கமிஷனர் அலவலகத்தில் புகார் அளித்தார்.

சனம் ஷெட்டி மீது குற்றச்சாட்டு

சனம் ஷெட்டி மீது குற்றச்சாட்டு

தன் மீதான புகாரை மறுத்த தர்ஷன், சனம் ஷெட்டி தனது எக்ஸ் காதலருடன் லேட் நைட் பார்ட்டிகளில் பங்கேற்றதாக குற்றம்சாட்டினார். மேலும் சனம் பிகினி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறிளார் தர்ஷன். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாஸ்லியாவுடன் நடிக்கும் தர்ஷன்

லாஸ்லியாவுடன் நடிக்கும் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஷெரினுடன் ஏற்பட்ட நெருக்கம் தான் தர்ஷன் - சனம் ஷெட்டி பிரிய காரணம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தர்ஷனும் சக பிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மலையாள ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்

மலையாள ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்

கூகுள் குட்டப்பா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தர்ஷனும் லாஸ்லியாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா படம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இணைந்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் மனோ பாலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள தர்ஷன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

எடையை குறைத்துள்ள தர்ஷன்

எடையை குறைத்துள்ள தர்ஷன்

அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டுள்ளார். அதாவது 4 வாரத்துக்கு முன்பு எடுத்த போட்டோவையும் தற்போது எடுத்த போட்டோவையும் ஒப்பிட்டு ஷேர் செய்துள்ளார். இதில் தர்ஷன் கடுமையாக எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.

4 வாரத்தில் 8 கிலோ குறைப்பு

4 வாரத்தில் 8 கிலோ குறைப்பு

4 வாரத்தில் 8 கிலோ எடையை குறைத்துள்ளதாக பதிவிட்டுள்ள தர்ஷன், 4 வார ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், எடிட்டிங்கா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நீங்கள் எப்படி இருந்தாலும் க்யூட் தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X