»   »  ரஜினி பிறந்த நாளில் பில்லா!

ரஜினி பிறந்த நாளில் பில்லா!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி அஜீத் நடித்துள்ள பில்லா ரிலீஸாகிறது. ரஜினிக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கும் வகையில், அவரது பிறந்த நாளின்போது பில்லா ரீமேக்கை ரிலீஸ் செய்கிறார்களாம்.

ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ் தயாரிக்க, இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கைவண்ணத்தில், ரஜினியின் பில்லா ரீமேக் ஆகியுள்ளது. அஜீத் ரஜினி கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீபிரியா வேடத்தில் நயனதாராவும், பிரவீணா செய்த கேரக்டரில் நமீதாவும் நடித்துள்ளனர்.

படம் அட்டகாசமாக வந்திருப்பதாக திரைத் துறையினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

படத் தொடக்க விழாவின்போது இந்தப் படத்தை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருந்தார் அஜீத். தற்போது பேச்சோடு நிற்காமல் உண்மையிலேயே ரஜினிக்கு இப்படத்தை அர்ப்பணம் செய்கிறார்கள். அதாவது ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி பில்லாவை திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.

தீபாவளிக்கே பில்லா வருவதாக இருந்தது. ஆனால் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ரஜினிக்கு இப்படத்தை சமர்ப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளின்போது திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.

சூப்பர் முடிவு, தல!

Read more about: billla 2007

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil