»   »  ரஜினி பிறந்த நாளில் 'பில்லா'

ரஜினி பிறந்த நாளில் 'பில்லா'

Subscribe to Oneindia Tamil

அஜீத் நடித்துள்ள பில்லா ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது.

நயனதாரா-நமிதா ஜோடியாக நடிக்கும் ரீமேக் படமான பில்லாவை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைலர் காட்சி ரஜினிக்காக இரு தினங்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டூடியோவில் திரையிட்டு காட்டப்பட்டது.

அதை பார்த்த ரஜினி, அஜித்துக்கும், டைரக்டர் விஷ்ணுவர்த்தனுக்கும் தனது பாராட்டை தெரிவித்ததுடன், காட்சிகளை பற்றி ஒரு சில டிப்ஸ்களையும் கொடுத்தாராம்.

பில்லாவின் ஆடியோ ரிலீஸ் வரும் 21ம் தேதி நடக்கிறது. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 12ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.

ரஜினிகாந்த் பிறந்த நாளன்று பில்லாவை ரிலீஸ் செய்ய வேண்டுமென்று அஜீத் விரும்பியதையடுத்து, இயக்குனரும், தயாரிப்பாளரும் அதற்கான வேலைகளை விரைவாக செய்து வருகிறார்களாம்.

Read more about: ajith, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil