தள்ளிப் போனது பில்லா!

By Staff
Click here for more images
தீபாவளிக்கு வரும் என 'தல' ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அஜீத்தின் பில்லா, நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டு விட்டது.

தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்ப்பட்ட முக்கியமான படம் பில்லா.

ஆனால் இந்தப் படம் தற்போது தீபாவளிக்கு வரவில்லை. மாறாக நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டு விட்டது. இதை படத் தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், படப்பிடிப்பை முடித்து விட்டோம். பின்னணி இசை மற்றும் ரீ ரெக்கார்டிங் வேலைகள் தொடங்கியுள்ளன. மும்பையில் அந்த வேலை நடந்து வருகிறது. படப் பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளைக் கவனிப்பதற்காக இயக்குநரும், கேமராமேனும் சென்னை திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் நவம்பர் 30ம் தேதி 250 பிரிண்டுகளுடன் பில்லா திரையிடப்படும். முதல் முறையாக இப்படத்தை வெளிநாடுளில் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடுகிறோம். பில்லா ஆடியோ நவம்பர் 15ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

இதற்கிடையே, இப்படத்தை இந்தியாவில் திரையிடும் உரிமையை பிரமீட் சாய்மீரா நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை ஜாக்கி சானின் ஸ்டண்ட்மேன் வில்லியம் ஆங் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாரின் பில்லா படத்தின் ரீமேக்கான அஜீத்தின் பில்லா, 'தல' ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Read more about: ajith billa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X