Allu Arjun Net Worth: இந்திரன் போல வாழும் அல்லு அர்ஜுன்.. 43 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: பிரபல டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் அல்லு அர்ஜுன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்தின் அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார். தெலுங்கில் ஸ்டைல் சூப்பர் ஸ்டாராகவே திகழும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் மூலம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய புரட்சி செய்ததை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சினிமா உலகம் மறக்கவே மறக்காது.

ராஜமெளலி உதவியுடன் தான் பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் எல்லாம் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுத்தனர் என சொல்லப்பட்டு வரும் நிலையில், சுகுமார் இயக்கத்திலேயே அந்த சாதனையை படைத்தவர் தான் அல்லு அர்ஜுன்.

Birthday Boy Allu Arjun s King size life style and Net Worth details are here

இந்தியாவிலேயே தளபதி விஜய், ஷாருக்கானை விட அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் ஸ்டாராக இந்திரன் போல வாழும் அல்லு அர்ஜுனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

அல்லு அர்ஜுன் 43வது பிறந்தநாள்: தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன் தான் அல்லு அர்ஜுன். 1000 படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்து தெலுங்கு ரசிகர்களை சிரிக்க வைத்த அல்லு ராமலிங்கையாவின் பேரன் தான் அல்லு அர்ஜுன் என்பது கூடுதல் தகவல். சென்னையில் கடந்த 1982ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பிறந்த அல்லு அர்ஜுன் சிறு வயதிலேயே விஜேதா, சுவாதி முத்தயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான அல்லு அர்ஜுன் டோலிவுட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகராக மாறியுள்ளார்.

300 கோடி சம்பளம்: புஷ்பா 2 திரைப்படத்துக்கு அதிகபட்சமாக அல்லு அர்ஜுன் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்திய பணக்கார நடிகர்களின் பட்டியலில் அல்லு அர்ஜுன் பெயர் ஃபோர்ப்ஸ் நாளிதழிலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் இன்று அறிவிக்கப்படவுள்ள புதிய படத்துக்கும் 300 கோடி சம்பளம் வாங்குவாரா? அல்ல அதற்கும் மேல் கேட்பாரா என திரையுலகமே அறிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது. இன்று காலை 11 மணிக்கு அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகிறது.

அல்லு அர்ஜுன் குடும்பம்: சினேகா ரெட்டி என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் அல்லு அர்ஜுன். அவர்களுக்கு அயான் மற்றும் அர்ஹா என ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சமந்தா நடித்த சாகுந்தலம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் 8000 சதுர அடியில் பிரம்மாண்ட மாளிகையில் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு: 2024ம் ஆண்டு வரை கிடைத்த தகவலின் படி அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு 460 கோடி என்கின்றனர். அடுத்து சன் பிக்சர்ஸ் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள நிலையில், 600 கோடி ரூபாய்க்கும் மேல் சொந்தக்காரராக அல்லு அர்ஜுன் விரைவில் மாறிவிடுவார் என்கின்றனர். இந்தியளவில் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் 43வது பிறந்தநாளை கொண்டாடி வரும் புஷ்பாவை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X