‘சத்தம் போடாமல்’ இன்று 31வயதைத் தொட்ட ‘ஸ்வீட்பாய்’ ப்ருத்விராஜ்

திருவனந்தபுரம்: நடிகர் ப்ருத்விராஜூக்கு இன்று 31 வது பிறந்தநாள்.

கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ப்ருத்விராஜ். மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவர் இன்று தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிறப்பு....

பிறப்பு....

1982ம் வருடம் அக்டோபர் 16ம் நாள் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ப்ருத்விராஜ் சுகுமாறன். இவரது அப்பா நடிகர் சுகுமாறன் நாயர். அம்மா மல்லிகா சுகுமாறன்.

கல்வி....

கல்வி....

பள்ளிக் கல்வியை கேரளாவிலும், கல்லூரி படிப்பை ஆஸ்திரேலியாவில் தான்சேனியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார் ப்ருத்வி.

திரைக்குடும்பம்...

திரைக்குடும்பம்...

இவரது அண்ணன் இந்திரஜித் சுகுமாறனும், அவரது அண்ணி பூர்ணிமா இந்திரஜித்தும் திரையுலகைச் சேர்ந்தவர்களே.

நடிப்பிற்காக....

நடிப்பிற்காக....

தனது 19வது வயதில் வெளிநாட்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது, ரஞ்சித் பாலகிருஷ்ணனின் ‘நந்தவனம்' படத்திற்காக இந்தியா திரும்பி வர அழைக்கப்பட்டார்.

தாடி வச்ச ஹீரோ....

தாடி வச்ச ஹீரோ....

படத்திற்காக இள வயதிலேயே தாடி வளர்க்கவும் தயங்காத திறமையான நடிகர் ப்ருத்வி.

அறிமுகம்...

அறிமுகம்...

தமிழில் பாரிஜாதம் படத்தில் பாக்யராஜ் மகளுக்கு ஜோடியாக கதாநாயகனாகவும், கனாக் கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமானார் ப்ருத்வி.

ரசிகர்கள்....

ரசிகர்கள்....

மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

ஹிந்திப்படப் பிரவேசம்....

ஹிந்திப்படப் பிரவேசம்....

2012ம் ஆண்டு ஹிந்தியில் ராணி முகர்ஜியுடன் இவர் நடித்த ஐய்யா படம் மூலம் ஹிந்தியிலும் பிரபலமானார். தற்போது ஹேப்பி நியூ இயர் படத்தில் ஹாரூக், தீபிகா படுகோனே உடன் நடித்து வருகிறார்.

உலக அழகி ஜோடியாக...

உலக அழகி ஜோடியாக...

மனிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தார்.

பாடகர்....

பாடகர்....

நடிகராக மட்டுமல்லாமல் 2009ம் ஆண்டு வெளிவந்த புதிய முகம் படத்தின் மூலம் பிரபலமான பாடகராகவும் ஆனார்.

திருமணம்....

திருமணம்....

கடந்த 2011ம் ஆண்டு பிபிசி பத்திரிக்கையாளரை மணந்து இளம் ரசிகைகளின் கோபத்திற்கு ஆளானார் ப்ருத்வி.

மாநில விருது....

மாநில விருது....

2006ல் வாஸ்தவம் படத்திற்காகவும், 2012ல் செல்லுலாய்டு படத்திற்காகவும் கேரள அரசின் மாநில விருதுகளை வாங்கினார்.

திறமையான நடிகர்....

திறமையான நடிகர்....

நடிப்பு, தயாரிப்பு, பாடகர் என பன்முக திறமைகளை நிரூபித்து வரும் ப்ருத்வி, இன்று அறிமுகமாகும் பல இளம் நடிகர்களுக்கு போட்டியாக, திறமையான நடிகராக திரையுலகில் வலம் வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X