த்ரிஷா மாட்டிக்கிட்டாரு.. பார்த்திபன் விதவிதமா டார்ச்சர் பண்ணப்போறாரு.. ப்ளூ சட்டை மாறன் பளிச்!

சென்னை: நடிகை த்ரிஷா பற்றி மேடையில் குந்தவையை வீட்டிலேயே குந்த வைங்க என பேசியது பெரும் பரபரப்பானது. மைக் கிடைத்துவிட்டால் பேசுவது எல்லாம் அறிவாளித்தனமாக ஆகிவிடாது என பார்த்திபனை குறிப்பிடாமல் மறைமுகமாக த்ரிஷா ட்வீட் போட, முதலில் மன்னிப்புக் கேட்ட பார்த்திபன் அதன் பின்னர், த்ரிஷாவை மூன்றாம் மனுஷி என்றும் மூன்றாம் தரமானவர் என கடுமையாக விமர்சித்து வீடியோவே வெளியிட்டு விட்டார்.

ஏற்கனவே சமுத்திரகனி நடிகர் விஜய் பற்றியும் த்ரிஷா பற்றியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவில் தனிப்பட்ட முறையில் பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. நடிகை ரஞ்சனி நாச்சியார் தவெகவில் இருந்தாலும், வொர்த் இல்லை என சங்கீதா விஜய்யை எப்படி சொல்லலாம் என்றும் த்ரிஷாவை திருமணத்துக்கு அழைத்து வந்தது சரியல்ல என்றும் விளாசினார்.

Blue Sattai Maran attacks Parthiban over his controversy statement on Trisha
Photo Credit:

இந்நிலையில், பார்த்திபன் இனிமேல் தொடர்ந்து நடிகை த்ரிஷாவை விதவிதமாக டார்ச்சர் செய்யப் போகிறார் என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

த்ரிஷாவுக்கும் பார்த்திபனுக்கும் சண்டை: நடிகை த்ரிஷா பற்றி வெளிப்படையாகவே எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அசிங்கப்படுத்த ஆரம்பித்துவிட்டார் பார்த்திபன். அந்த பிரச்னையை பார்த்திபன் பெரிதுபடுத்த வேண்டாம் என்கிற நோக்கத்துடன் மன்னிப்புக் கேட்ட நிலையில், த்ரிஷாவின் ட்வீட் அவரை இப்படி வெளிப்படையாக போட்டு அடிக்க வைத்து விட்டது என்கின்றனர். பார்த்திபனின் வீடியோ தாக்குதலுக்கு இதுவரை த்ரிஷா எந்தவொரு ட்வீட்டோ அல்லது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டோ, கண்டன அறிக்கையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக வந்தால் மீண்டும் பார்த்திபன் புதிதாக அட்டாக் செய்வார் என்பதால் அமைதியாகிவிட்டாரா அல்லது ரசிகர்கள் மூலமாக அட்டாக் செய்வாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

ப்ளூ சட்டை மாறன் அட்டாக்: இந்த கொசு தொல்லை வேற தாங்க முடியல என பார்த்திபன் - த்ரிஷா சண்டையை ஆரம்பத்தில் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் தற்போது மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "பார்த்திபன் விளக்கம் கொடுப்பது, மறுவிளக்கம் கொடுப்பது எல்லாம் ஓகே. ஆனால் அதை 'வித்தியாசமாக' சொல்ல வேண்டும் என்று விதவிதமாக டார்ச்சர் செய்யப்போகிறார்.

வார்த்தை விளையாட்டு என்பது வார்த்தைகளை உயரே போட்டு பூக்களாக மலரச் செய்வதைப் போன்ற, ரசிக்கத்தக்க அழகான மேஜிக்.

ஆனால் பார்த்திபனோ வார்த்தைகளைக் குப்புறப்போட்டு, அதன்மேல் மரணகிணறு மோட்டார் ஓட்டுவார். என சுகுணா திவாகர் என்பவர் சொன்ன கருத்தை கோடிட்டு ப்ளூ சட்டை மாறன் நிரப்பியுள்ளார். ஏற்கனவே இவருக்கும் பார்த்திபனுக்கும் ஏகப்பட்ட வாய்க்கால் தகராறு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X