உங்கள் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்த சங்கீதா.. வொர்த் இல்லையா?.. விஜய்யை வெளுக்கும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்து கோரியிருக்கிறார் அவரது மனைவி சங்கீதா. அதுமட்டுமின்றி இரண்டாவதாகவும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், 'நீலாங்கரை வீட்டுக்குள் தன்னை அனுமதிக்க விஜய் மறுக்கிறார். நான் வீடின்றி தவிக்கிறேன். வழக்கு விசாரணை முடியும்வரை நான் அங்கே தங்குவதற்கு அனுமதியளிக்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். இப்படி சங்கீதாவின் ஒவ்வொரு மூவும் பெரும் பரபரப்பை உண்டு செய்திருக்கிறது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் தற்போது தனது பெர்சனல் வாழ்க்கையில் சிக்கலில் தவித்துவருகிறார். முதலில் தன் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுக்கு எதுவும் பதிலளிக்காமல் அமைதியாகவே இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடிகை திரிஷாவுடன் ஒரு திருமணத்துக்கு ஜோடியாக வந்து வாழ்த்தினார். எல்லோரும் திரிஷாவை சந்தேகப்பட்டுக்கொண்டிருக்க; எதை பற்றியும் கவலையில்லாமல் அவர் அப்படி செய்தது; அவருக்கு அவரே கன்னி வெடி வைத்ததற்கு சமம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Blue Sattai Maran Criticizes Vijay s Worth Comment Amid Sangeetha Divorce Row
Photo Credit:

வொர்த் இல்லை என பேச்சு: இது போதாது என்று வீட்டுக்குள்ளும் சங்கீதாவை தங்க விஜய் அனுமதி மறுப்பதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு; மேற்கொண்டு அவர் இமேஜை சீண்டி பார்த்திருக்கிறது. இத்தனைக்கும் அமைதியாக இருந்த அவரோ; சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த தவெக மகளிர் அணி கூட்டத்தில், 'இந்தப் பிரச்னையை பற்றியெல்லாம் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் ஃபீல் செய்யும் அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு வொர்த் இல்லை' என அலட்சியமாக பேசியது; தன்னுடன் வாழ்ந்த ஒருவரை இப்படி அலட்சியப்படுத்துகிறாரே என்று புது பேச்சை அவரை நோக்கி எழ செய்துவிட்டது.

Also Read
விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா?.. அதனால்தான் டார்கெட்டா?.. தவெக முக்கிய தலைகட்டு ஓபன்
விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா?.. அதனால்தான் டார்கெட்டா?.. தவெக முக்கிய தலைகட்டு ஓபன்

வலுக்கும் கண்டங்கள்: விஜய் செயல்பாடுகளுக்கு சாமானியர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலிருந்தே கண்டன குரல்கள் கேட்கின்றன. இது அவரது தனிப்பட்ட பிரச்னை என சொல்லி சிலர் கடந்தாலும்; அவர்கள் மனதுக்குள் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை. முதலில் சமுத்திரகனி ஆரம்பித்து வைத்தார்; அடுத்ததாக பார்த்திபன், வையாபுரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதுகுறித்து குரல்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய பேட்டி ஒன்றை பகிர்ந்து; பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "தனது இரு பிள்ளைகளையும் சங்கீதா எப்படி அன்புடனும், பொறுப்புடனும் வளர்த்தார் என்பதை கூறுகிறார் எஸ்ஏசி. ஆனால் Worth இல்லை எனும் ஒற்றை வார்த்தையில் தெனாவட்டாக பேசியுள்ளார் ஜனநாயகன்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

எஸ்.ஏ.சி பேட்டி: அந்தப் பேட்டியில், "இரண்டு பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் சங்கீதா வாட்ச் செய்வாங்க, ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போவது, வீட்டுக்கு அழைத்து வருவது; வந்ததும் ஹோம் ஒர்க் என அத்தனையையும் அவர்தான் கவனிப்பார். நம் வீட்டுக்கு அவர்கள் வரும்போது; பிள்ளைகளுக்கு ஏதாவது நாம் கொடுத்தாலே அவர்கள் அம்மா ஓகே சொன்னால்தான் வாங்கிக்கொள்வார்கள்" என்றிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X