கீர்த்தி சுரேஷ் திருமணம்னா போவார்.. திரிஷாவுக்கு வாய் திறக்கமாட்டார்.. விஜய் மீது ப்ளூ சட்டை மாறன் அட்டாக்
சென்னை: விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பலரும் விஜய் - திரிஷாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார். அது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா மனுத்தாக்கல் செய்திருக்கும் நிலையில்; திரிஷாவுடன் ஜோடியாக வந்தார் விஜய். அவர் அப்படி செய்தது அவரது இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அனைவருமே அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அவரோ சங்கீதா பிரச்னை அவ்வளவு வொர்த் இல்லை என்று அலட்சியமாக பேசினார். அதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இப்படி பேசுவதற்கு பேசாமலேயே இருந்திருக்கலாம் எனவும் அட்வைஸ்கள் பறக்கின்றன விஜய்க்கு.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கையை நிறுத்தியிருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல் என நாஞ்சில் சம்பத் பேசியிருபப்தை பகிர்ந்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "மௌனவிரத மாஸ்டர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வர சொல்வேன். கரூரில் இறந்தோர் குடும்பத்தினரையும் பனையூருக்கு வர சொல்வேன். கொள்கை தலைவர் பெரியார் பற்றி மிக இழிவாக யார் பேசினாலும்... நான் அவர்களை கண்டிக்க மாட்டேன்.
யார் பற்றியும் பேசுவதில்லை: கொள்கை தலைவர்கள் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் பற்றி அடிக்கடி பேசுவேன். காமராஜர், அம்பேத்கர், பெரியார் பற்றி 99% பேச மாட்டேன். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச மாட்டேன். தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டதென வெறியாவேன். ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடுவேன் என கூற மாட்டேன். லஞ்சம், ஊழல் பெருத்து போச்சு என கத்துவேன். ஆனால் என் படங்களுக்கு ப்ளாக் டிக்கெட் விற்பது, வாங்குவது பற்றி எந்த காலத்திலும் பேச மாட்டேன்.
திரிஷாவுக்கு மௌனம்: கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு போவேன். ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு போக மாட்டேன். வீட்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருவேன். ஆனால் சிலிண்டர் விலை ஏறியது பற்றி பேச மாட்டேன். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசம் என போராடுவேன். ஆனால் தமிழ்நாட்டிற்கு கல்விநிதி தராத மத்திய அரசை எதிர்த்து போராட மாட்டேன்.தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அடிக்கடி பொங்குவேன். ஆனால் த்ரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன்.
கட்டுப்படுத்த தவறிய விஜய்: ஜனநாயகன் சென்சார் பிரச்னைக்கு காரணம் பாஜக அரசு என நாஞ்சில் சம்பத் பேசுவார். ஆனால் நான் வாய் திறக்க மாட்டேன். கரூர் சிபிஐ விசாரணையை தமிழ்நாட்டில் நடத்த சொல்வேன். நான் இன்று டெல்லிக்கு வர முடியாது என காரணம் சொல்வேன். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட மாட்டேன். ஒவ்வொரு கூட்டத்திலும்.. ஒழுக்கத்தை கடைபிடிக்காமல்.. முண்டியடித்து ஓடி வரும் அணில்குஞ்சுகளை கட்டுப்படுத்த மாட்டேன்" என கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது அதீத கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















