குபேரா தனுஷின் பேச்சு.. இது கலிகாலம்.. அவருக்கு தைரியமே இல்லை.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்

சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் குபேரா திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைதான் பெற்றது. இருப்பினும் தமிழ்நாட்டில் படத்தின் டிக்கெட் புக்கிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லாதது தனுஷின் ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கிடையே குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது பெரிய ட்ரெண்டான சூழலில் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அது அவருக்கு 50ஆவது படம் என்பதும் அதனை அவரே இயக்கி நடித்திருந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராயன் தோல்வி அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அந்தத் தோல்விக்கு தன்னுடைய அடுத்த படத்தில் பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.

குபேரா தனுஷ்: அந்தவகையில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் பந்தயம் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் படத்துக்கான டிக்கெட் புக்கிங் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

Blue Sattai Maran Trolls Dhanush For His Speech At Kubera Audio Launch
Photo Credit:

தனுஷின் பேச்சு: இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், 'நீங்கள் நான்கு வதந்திகளை பரப்பி என்னை காலி செய்துவிடலாம் என்று நினைத்தால் உங்களால் ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது. என்னுடைய ரசிகர்கள் எனக்கு வெறும் ரசிகர்கள் மட்டுமில்லை. அவர்கள் என் வழித்துணைகள். அவர்களது கையும், ஆண்டவனின் கையும் இருக்கும்வரை நான் முன்னேறி போய்க்கொண்டே இருப்பேன்' என பல விஷயங்களை பேசினார்.

ட்ரோல்: அவரது இந்தப் பேச்சு அவரது ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் பொதுவான ரசிகர்களிடம் ட்ரோலைத்தான் சந்தித்திருக்கிறது. அப்படியே ரஜினியே பாடி லாங்குவேஜை காப்பி அடித்து பேசுகிறார் என்று கிண்டல் செய்த அவர்கள்; மேடைக்கு மேடை தனுஷுக்கு இதே வேலையா போச்சே; ஏன் இவ்வளவு பில்டப்பை தனக்கு தானே கொடுத்துக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டுமின்றி அந்தப் பேச்சில் அவர் நயனைத்தான் குறிப்பிட்டார் என்றெல்லாம் குரல்கள் எழுந்தன.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் தனுஷின் அந்தப் பேச்சு குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், "இது கலி காலம். வெறுப்பு ஓங்கி நிக்கற காலம். தம்பிங்களா‌. கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க. என்னை காலி பண்ணனும்னு நெனச்சா ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது. தீப்பந்தம் போல என் ரசிகர்கள் உள்ளவரை நான் மேல போய்க்கிட்டே இருப்பேன் - தனுஷ்‌ யாரை சொல்றாரு. எதுக்கு சொல்றாருன்னு‌ யாருக்கும் புரியல. நயன்தாராவை சொல்றதா ஒரு க்ரூப் பேசுது. திடீர் தளபதியை திட்டுறதா இன்னொரு க்ரூப் பேசுது‌

இந்த நடிகர்களுக்கு வெளிப்படையா பேசவும் தைரியம் இல்ல. பேசாம இருக்கவும் முடியல. ஒரே தமாசுதான். ஆடியோ/ட்ரைலர் லாஞ்ச்களை இப்படி ரசிகர் மன்ற கூட்டமா மாத்துறதே பலருக்கு வேலையா போச்சி. இந்த மாதிரி pre release பஞ்ச் எல்லாம் படம் வந்ததும் troll பண்ணத்தான் யூஸ் ஆகுது படத்தை ஒழுங்கா எடுத்தா..‌அதை மக்களே பாராட்டி பேசுவாங்க. இப்படி பேசுறதெல்லாம் பயங்கர‌cringe ஆகி ரொம்ப நாள் ஆனது இன்னும் இவங்களுக்கு தெரியலையா.. இல்லன்னா தெரிஞ்சும்.. இப்படி பேசி.. இருக்கற ரசிகர்களை ரசிக மனோபாவ மாய வலையை விட்டு வெளிய போயிடாம பாத்துக்கறாங்களா? படத்துல பொழுதுபோக்கு இல்லைன்னாலும்.. இந்த மாதிரி pre release பேச்சுகள் செம என்டர்டைன்மென்டா இருக்குடாப்பா. சாரோட மேடை மேனரிசம், டயலாக் டெலிவரி எல்லாம்.. தலீவர் பாணில இருக்கறது மக்களுக்கு ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X