ரஜினியின் கூலி படம் சூப்பரா?.. விமர்சனத்தை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்.. வெச்சு செஞ்சிட்டாரே ப்பா
சென்னை: ரஜினிகாந்த்தின் படங்கள் வெளியானாலே ப்ளூ சட்டை மாறன் ஃபுல் ஃபார்மில் இருப்பார். அந்தப் படத்தின் வசூல் பற்றிய பேச்சுக்கள், படத்தின் ரிசல்ட் என அத்தனையையும் கலாய்ப்பார். இந்நிலையில் கூலி படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் வழக்கம் போல் கோதாவில் குதித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அது ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அப்படத்தின் ரிசல்ட் ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாக்கினாலும்; லோகேஷுடன் தலைவர் இணைந்திருக்கும் கூலி படம் இதற்கு ஈடு செய்துவிடும் என்று நம்பினார்கள். லோகேஷும் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படத்துக்கும் அடி கொஞ்சம் பலமாகவே விழுந்தது. அதன் காரணமாக இப்படத்தை வெற்றி படமாக கொடுத்துவிட வேண்டும் என்று உழைத்தார் லோகி.
உலகம் முழுவதும் ரிலீஸ்: அறிவித்தபடி படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. மொத்த்ம் 5,000 திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறதாம். படத்தின் டிக்கெட் புக்கிங்கிலேயே நூறு கோடி ரூபாய் வசூல் வந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு தொடர்ந்து ஓடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று ரிலீஸான படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சிக்கே சென்றுவிட்டார்கள். அதனால் தியேட்டர் திருவிழா போல் காட்சியளித்தது.

எப்படி இருக்கு படம்?: ரொம்பவே எதிர்பார்த்துதான் படத்துக்கு சென்றார்கள் ரசிகர்கள். ரஜினியின் ரசிகர்களுக்கு படம் டபுள் ஓகே. ஆனால் பொதுவான ரசிகர்கள்தான் சீட்டுகளில் நெளிய ஆரம்பித்தார்கள். ஸ்க்ரீன் ப்ளே, கதை, மேக்கிங் என எதிலுமே ஒன்றுமே இல்லை; பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள் தலைதூக்கி ஆடுகின்றன; க்ளைமேக்ஸும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
ரஜினியின் எனர்ஜி: அதேசமயம் ரஜினி என்ற ஒற்றை மனிதருக்காக தாராளமாக படத்தை பார்க்கலாம். இந்த வயதிலும் அவருக்கிருக்கும் எனர்ஜி கண்டிப்பாக ஒரு மேஜிக்தான் என கொண்டாடிவருகிறார்கள். இதற்கிடையே படம் பிடிக்காதவர்களோ, தான் கமல் ரசிகர் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்துவிட்டார். தேவையில்லாமல் ரஜினியை வைத்து செய்துவிட்டாரே என்றும் ஒரு கமெண்ட்டை பறக்கவிடுவது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ரஜினியையும், அவரது படங்களையும் தொடர்ந்து கிண்டலடிக்கும் ப்ளூ சட்டை மாறன் கூலி படத்தை வைத்தும் கிண்டல் அடித்து விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு படத்தில் வடிவேலு ஆர்.சுந்தர்ராஜனிடம் கையை கொடு சகல என்று சொல்லும் சீனை எடுத்து வடிவேலு கமல் என்றும், சுந்தர்ராஜன் லோகேஷ் என்றும் குறிப்பிட்டு மீம் ஒன்றை போட்டிருக்கிறார். இது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











